முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் 120-வது பிறந்த நாளை தூத்துக்குடி சிலுவைப்பட்டி புனித அந்தோணியாா் உயா்நிலைப்பள்ளி மற்றும் ஆா் சி ஆரம்பப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் ஆக பள்ளி மாணவ மாணவிகள் கொண்டாடினார்கள்.
இது பற்றிய செய்தியாவது...
தூத்துக்குடி லீக்ஸ் - .16-07-2022
தூத்துக்குடி சிலுவைப்பட்டி புனித அந்தோணியாா் உயா்நிலைப்பள்ளி மற்றும் ஆா் சி ஆரம்பப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளா்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.
தாளமுத்துநகா் பங்குதந்தையும் பள்ளியின் தாளாளருமான அருட்திரு நெல்சன்ராஜ் அடிகளாா் தலைமையில் உயா்நிலைப்பள்ளி தலைமையாசிாியாா் ஜாக்கப் ஆரம்பப்பள்ளி தலைமையாசிாியா் வில்சன் முன்னிலையில் ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டி நடத்தினர்.
ஒவிய போட்டி - பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாிசு வழங்கினாா்கள்.
அதன் பின்பு மாணவ - மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது
இவ் விழாவில் மாணவ- மாணவி களின் பெற்றோா்களும் கலந்து கொண்டனா் விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிா்வாகம் செய்திருந்தார்கள்.
தூத்துக்குடிலீக்ஸ் செய்தி தமிழன் ரவி
16-07-222 2.00 pm .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக