வெள்ளி, 22 ஜூலை, 2022

தூத்துக்குடியில் பாஜக கட்சி மக்களை திரட்டி மாபெரும் அறப்போராட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆனையரிடம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக வினர் மனு அளித்தனர்

இந்திய சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய ஆஷ்துரை நினைவிடத்தை மக்களின் வரிப் பணத்தில் புதுப்பிக்கும் தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்தும், அப்பணியை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும்    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்

மாவட்ட தலைவர் R. சித்ராங்கன் தலைமையில் மாநகராட்சி ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் இன்று (22.07.2022) காலை 11.00 மணிக்கு மனு அளித்தனர்.



அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஐயா,

தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பாக ஆங்கிலேயன் ஆஷ்துரை நினைவு மண்டபத்தை

புதுபிக்கும் பணியை செய்து வருவது கேள்விபட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தோம். 


ஆஷ் துரை சுதந்திரபோராட்ட காலத்தில் சுதந்திர போராட்ட வீரர்களை

அடக்குவதிலும் அவர்களுக்கு கொடூரமான தண்டனைகள் வழங்குவதிலும் தன் வாழ்நாள் முழுவதும் செலவழித்து வந்தார்.

 இந்த தூத்துக்குடி மண்ணில் பிறந்து இந்திய தேசிய விடுதலைக்காக போராடிய கப்பலோட்டிய தமிழன் ஐயா.வ உ.சிதம்பரனார் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியவர் தான் 

இந்த ஆஷ் துரை.

பல சுதந்திரப் போராட்ட வீரர்களின் உயிர் மூச்சை தான் நாம் சுதந்திர காற்றாக சுவாசித்துக்கொண்டிருக்கிறோம் என்றால் அது மிகையல்ல. நம் தேசம் சுதந்திரம் பெறுவதற்கு நமது தலைவர்கள் அறவழியில் போராடி இருந்தாலும் ஆங்கிலேய அரசு சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு மிகப்பெரிய அடக்கு முறையை கையாண்டது என்பது வரலாற்று உண்மை

சிறைச்சாலையில் தலைவர்கள் அடைக்கப்பட்டு கொடூரமாக நடத்தப்பட்டதோடு, வாய் பூட்டு சட்டம்

எல்லாம் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் விடுதலைக்காக போராடியவர்கள் மீது திணிக்கப்பட்டது.

தேசம் முழுவதும் ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ந்து எழுந்த போது தென்னிந்தியாவில் குறிப்பாக

இந்த தூத்துக்குடி மண்ணில் ஐயா வ உ சிதம்பரம் ஆங்கிலேயருக்கு எதிராக வெகுண்டு எழுந்தார்.

வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் செயல்பாட்டால் கவர்ந்து இழுக்கப்பட்டு தேச விடுதலைக்கு

தன்னை அர்ப்பணித்தவர் வாஞ்சிநாதன். அந்த காலகட்டத்தில் இந்த பகுதியின் மாவட்ட

ஆட்சியாளராகவும் அமர்வு நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியவர் வெள்ளைக்கார ஆஷ்துரை

இந்திய சுதந்திர போராட்டத்தை

ஈவு இரக்கமற்று செயல்பட்ட ஒருவர்தான் இந்த ஆஷ் துரை.

நசுக்கியதோடு சுதந்திர போராட்ட வீரர்களை கொடூரமான முறையில் அடக்க ஆஷ் துரை முயன்றதால் அவரை

சுட்டுக் கொன்றதோடு தன்னையும் சுட்டு மாய்த்துக்கொண்டார் வாஞ்சிநாதன். தற்போது இந்தியா

சுதந்திரம் பெற்று 75 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்க இருக்கிறது இந்த சூழ்நிலையில் வெந்த

புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தூத்துக்குடியில் உள்ள ஆஷ் துரை நினைவுமண்டபத்தை

சீரமைக்கும் பணியை தற்போது மாநகராட்சி நிர்வாகம் செய்து வருவது. நம் தூத்துக்குடி மண்ணில்

சுதந்திரத்திற்காக போராடிய ஐயா வ.வு.சிதம்பரனார், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன், மாவீரன்

புலித்தேவன், மாவீரன் அழகுமுத்துகோன், வீரமகாகவி பாரதியார் போன்ற மாபெரும் தேச தலைவர்களை

அவமானப்படுத்தும் செயலாகும் இதனை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதனை

மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக முதலில் நிறுத்த வேண்டும்.


மக்களின் வரி பணத்தில் கொடுங்கோலன் ஆஷதுரை நினைவு மண்டபத்தை பராமரிக்க ஒரு பைசாகூட செலவழிக்க கூடாது. 

அவ்வாறு செய்தால் அது பாரததாயின் தவப்புதல்வி தமிழ்அன்னையை அவமதிக்கும் செயல். ஆஷ்துரை நினைவுமண்டபம் என்ற பெயரை உடனடியாக நீக்கி

அந்த இடத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் ஐயா வ.வு.சிதம்பரனார் பூங்கா என்ற புதிய பெயரை சூட்ட வேண்டும். 

பின்னர் புதுப்பிக்கப்படும் இடத்தில் மாவீரன் வாஞ்சிநாதன் திருவுருவம் அமைக்கப்படவேண்டும். 

மேலும் மேற்படி இடத்தை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து விட வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வைக்கப்படும் கோரிக்கையை மாநகராட்சி நிர்வாகம் அரசியலாக பார்க்காமல் தேசப்பற்று மிக்க கோரிக்கையாக கவனத்தில் கொண்டு அதனைநிறைவேற்றி தர வேண்டும். 

அதை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்ய தவறும்

பட்சத்தில் பாரதிய ஜனதா கட்சி மக்களை திரட்டி மாபெரும் அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக