செவ்வாய், 12 ஜூலை, 2022

குரும்பூரில் டீ கடையில் நின்றிருந்தவர் பட்ட பகலில் அரிவாளால் வெட்டி படுகொலை மர்மநபர்கள் கைது செய்ய தனிப்படை தூத்துக்குடி எஸ்.பி உத்தரவு

 தூத்துக்குடி மாவட்டம்: 12.07.2022

 குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை - எதிரிகளை விரைந்து கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவு விட்டார்.



இதுபற்றிய செய்தியாவது:-

திருச்செந்தூர் ராணி மகாராஜபுரம் பகுதியை சேர்ந்த முத்து மகன் சரவணகுமார் (43) என்பவரை இன்று (12.07.2022) காலை குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மன்புரம் பகுதியில் உள்ள ஓரு டீக்கடை அருகே மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.


இதுகுறித்து தகவலறிந்த குரும்பூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.



இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்  எல். பாலாஜி சரவணன்  சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை செய்தார்.



ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் முத்துகிருஷ்ணன், விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

 



 மேற்படி தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் சந்தேகப்படும்படியான 4 நபர்களை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக