கருமுட்டை வணிகம் என்பது பெண்ணின் உடல் மீது நிகழ்த்தப்படும் கடுமையான சுரண்டல் மற்றும் வன்முறையாகும்.
தமிழக அரசு கருவின் பாலினம் அறிவித்தல், பாலின தேர்வை தடை செய்தல் சட்டத்தை (PC & PNDT) முழுமையாக தமிழ கத்தில் அமல்படுத்த வேண்டும்.
பெண் கருக் கொலையை தடுக்க பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சமூக செய்தி அடங்கிய ஊடக விளம்ப ரங்களை வெளியிட வேண்டும்.
கருக் கொலை அதிகம் நடக்கும் மாவட்டங்களில் கூடுதல் கவனத்துடன் கொண்டு செல்ல வேண்டும்.
பெண் சிசு / கருக் கொலைக்கும், கருமுட்டை விற்பனைக்கும் காரணமாக இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள், ஸ்கேன் சென்டர் உரிமையாளர் ஆகியோர் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
கருமுட்டை விற்பனையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து, அச்சிறுமிக்கு கல்வி புகட்டி அவர்களது எதிர்கால வாழ்க்கையை உத்தரவாதப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்னர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக