திங்கள், 20 ஜூன், 2022

கண்பார்வையற்றோர்க்கு நவீன ஊன்றுகோல் உருவாக்கிய பள்ளி மாணவருக்கு தூத்துக்குடி எஸ்.பி பாராட்டு

 தூத்துக்குடி லீக்ஸ்: 20.06.2022


 கண்பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு உதவும் வகையிலான நவீன கைத்தடி ஊன்றுகோல் உருவாக்கிய  பள்ளி மாணவருக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன்  பாராட்டினார்.



இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி காமராஜ் மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் ஷகில் இஜாஸ் என்னும் மாணவர் கண்பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கும் உதவும் வகையிலான ஒலி அமைப்புடன் கூடிய நவீன கைத்தடி கருவியை உருவாக்கியுள்ளார். 

இதில் ஒரு மீட்டர் முன்னதாக சுவரோ அல்லது ஏதேனும் தடுப்போ இருந்தால் பீப் ஒலி எழுப்பும் வகையில் நவீன கைத்தடி கருவி வெளிப்படுத்தும்.

மேற்படி பள்ளி மாணவர் ஷகில் இஜாஸ், தான் கண்டுபிடித்த நவீன கருவியுடன் இன்று (20.06.2022) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்பாலாஜி சரவணன் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக