தூத்துக்குடி விவிடி நினைவு ஆரம்ப பள்ளியில் சிறுவர் - சிறுமியருக்கு இலவச ஓவிய பயிற்சி நடைபெற்றது!
தூத்துக்குடி, ஆரோக்கியபுரத்தில் உள்ள விவிடி நினைவு ஆரம்ப பள்ளியில் நேற்று 04-06-2022 இலவச ஓவிய பயிற்சி நடைபெற்றது.
காமராஜர் நற்பணி மன்றத்தினர் மற்றும் நம்ம ஊர் வாட்சப் குரூப் ஆரோக்கியபுரம் நண்பர்கள் இணைந்து இப்பயிற்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள்.
திமுக ஒன்றிய கவுண்சிலா் இரா, பாலன் தொடங்கி வைத்தார். மாப்பிள்ளையூரணி அதிமுக பஞ்சாயத்து முன்னாள் ஊராட்சி மன்ற செயலாளர் சிலுவை அந்தோணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள்..
தாளமுத்துநகர், ராஜபாளையம், சிலுவைப்பட்டி, ஆரோக்கியபுரம் ஆகிய கிராமத்தில் உள்ள சிறுவர், சிறுமியர்கள் ஆர்வத்துடன் ஓவிய பயிற்சியில் கலந்து கொண்டனர்.
விவிடி நினைவு ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிாியா் ஜெயவேணி மற்றும் விவிடி ஆரம்பப் பள்ளியின் ஆசிாியைகள் நளினி மற்றும் ஆனந்தசெல்வி ஆகியோா் உலக சுற்றுப்புற சூழல் தினத்தை முன்னிட்டு ஓவியப்பயிற்சிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கினாா்கள்
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட காமராஜா் நற்பணி மன்றமும் ஆரோக்கியபுரம் வாட்ஸ் அப் குழுவும் இனைந்து செய்திருந்தனா்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக