தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ‘போதை மற்றும் காவல் நண்பன்” ஆகிய இரண்டு விழிப்புணர்வு குறும்படங்களை நேற்று (27-05-2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் வெளியிட்டு விழிப்புணர்வு பற்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.
![]() |
| தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் |
இதுபற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களிடையே கஞ்சா, மதுபானம் மற்றும் புகையிலை போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "போதை” என்ற குறும்படமும் பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் காவல்துறையினரின் காவல் செயலி போன்ற அவசர உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "காவல் நண்பன்” என்ற குறும்படமும் வெளியிடப்பட்டது.
மேற்படி இரண்டு குறும்படங்களையும் நேற்று (27.05.2022) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் வெளியிட்டு அவர் பேசியதாவது:-
மாணவ மாணவிகளாகிய உங்களுக்கு கல்வி தான் முக்கியமானதாக இருக்க வேண்டும். விளையாட்டில் எல்லைக்குட்பட்டு விதிமுறைகளை கடைபிடித்து விளையாடினால் வெற்றிபெற முடியுமோ அதேபோல் வாழ்க்கையிலும் நமக்கென்று எல்லைகளை வகுத்து சில விதிமுறைகளை கடைபிடித்து குறிக்கோள்களை அடைந்தால் நமது வாழ்க்கை சிறப்பாக அமையும்.
![]() |
| போதை வெளியீடு-1 |
![]() |
| காவல் நண்பன் வெளியீடு -2 |
சமூகத்தில் உயரிய பதவியில் இருப்பவர்கள் பலர் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். உங்களுடைய திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். மேலும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை கெடுத்து கொள்ள வேண்டாம்.
போதைக்கு அடிமையாகாமல் தங்களை நல்ல செயல்களில் ஈடுபடுத்தி, சிறப்பாக கல்வி பயின்று சாதனையாளர்களாக வரவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.
![]() |
| குறும்படத்தில் நடித்த கலைஞர் பாப்பா சங்கரை உற்சாக படுத்தி பாராட்டிய தூத்துக்குடி எஸ்.பி |
![]() |
| அதில் நடித்த கலைஞர் அனைவருக்கும் உற்சாக பாராட்டு வழங்கி ய ஏடிஎஸ்பி |
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் இ.கா.ப, மற்றும் தூத்துக்குடி மாவட்ட தொழில் நுட்பம் கலையுலக சங்கம் நடிகர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் குறும்பட தயாரிப்பாளர் மற்றும் செயல் இயக்குநர் மதன், இயக்குநர் சாம்ராஜ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக