வெள்ளி, 27 மே, 2022

அழிவு பாதை நோக்கி தூத்துக்குடி அனல் மின் நிலையம் குற்றச்சாட்டு பரபரப்பு தமிழ் நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

தூத்துக்குடியின் அடையாளமாகவும், பல நூறு பணியாளர்களுக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரமாக இருக்கும் மற்றும் பல்வேறைமுக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் TTPS- ஐ அழிக்கும் செயல்கள் தொடருமேயானால் பொதுமக்களின் சொத்தை பாதுகாக்கும் பொருட்டு தூத்துக்குடியில் உள்ள மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த ஏதுவாகும் என்பது இதன் மூலம் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி அனல்மின் நிலையம் அடிக்கடி இயக்குவது

மற்றும் நிறுத்துவது - தவிர்க்க வேண்டுவது - தொடர்பாக சமுக ஆர்வலர் ஜெயராஜ் டேவிட் சம்பந்தப்பட்ட தமிழ் நாடு மின்சார வாரியம் தலைவர் இயக்குநர் ஆகியோருக்கு  குற்றச்சாட்டு பரபரப்பு புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:-


தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5 யூனிட்களும் முறையே 1979, 1980,

1982, 1992 மற்றும் 1991ம் ஆண்டுகளில் உற்பத்தியை தொடங்கி இன்று வரை மின்

உற்பத்தி நடைபெற்று வருகின்றது. 


இந்த TTPS ஆனது மத்திய அரசின்

நிறுவனமான BHEL ஆல் வடிவமைப்பூ, கட்டடமைப்பு மற்றும் இயக்குதல் வரை

அனைத்து பணிகளும் செய்யப்பட்டன. 


இந்த மின் உற்பத்தி நிலையம் பொதுத்துறை நிறுவனமான TNEB-க்கு சொந்தமானது ஆகும். அதாவது பொதுமக்களுக்கு சொந்தமானது ஆகும்.



 எல்லா யூனிட்களும் 40 மற்றும் 30 ஆண்டுகள் மேலும் இயக்கத்தில் உள்ளன.

இந்த மின்நிலையத்தை கட்டமைப்பு செய்த BHEL நிறுவனம்

இங்குள்ள 5 யூனிட்களும் அடிக்கடி இயக்குதல் மற்றும் நிறுத்துதல் செய்வதற்கு

உகந்ததல்ல என்று விதி வகுத்துக் கொடுத்துள்ளது. 


(Not suitable for frequent

start stop operation). 

ஆனால் கடந்த 2022 April- 04 ம் தேதி முதல் TTPS-

ன் 5 யூனிட்களும் உற்பத்தியைத் தொடங்குவதும், சில மணி நேரங்களிலேயே நிறுத்தப்படுவதும் அடுத்த நாளே மீண்டும் இயக்கப்படுவது என்று யூனிட்களின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் வகையில் இயக்குதல் பணிகள் நடைபெற்று வருவது

மிகுந்த மனவருத்தத்தை அளிப்பதோடு கட்டமைப்பு செய்த நிறுவனத்தின்

ஆலோசனை மீறப்பட்டு யூனிட்கள் இயக்கப்படுவது பொறியியல் அறிவு சார் செயல் அல்ல என்பதும் உண்மை.


இதே போன்ற இயக்கத்தினால் தான் எண்ணூர் அனல்மின் நிலையம் இன்று

இல்லாமலே போய் விட்டது என்பதும் TTPS ன் 4வது யூனிட்டில் உயிர்பலியுடன்

கூடிய விபத்து ஏற்பட்டதற்கு கட்டமைப்பு செய்த நிறுவனத்தின் கட்டளைகள்

மீறப்பட்டதே காரணம் என்பதும் அனைவரும் அறிந்ததே.



எனவே யூனிட்களை அவற்றின் பாதுகாப்புக்கு உகந்த வகையில் இயக்க

வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மீண்டும் இது போன்ற பணிகள்

நடைபெற்றால் மின்நிலையத்தை பாதுகாக்கும் வகையில்

சட்ட பூர்வமான

நடவடிக்கைகள் எடுக்க ஏதுவாகும் என்பது இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதுவரை நடைபெற்ற தவறான இயக்குதல் பணிகளால் யூனிட்களில்ஏதாவது

பெரும் பொருட்செலவு ஏற்பட்டால் அதற்க்கும் தாங்களே

பொறுப்பாக்கப்படுவீர்கள் என்பதும் தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் தூத்துக்குடியின் அடையாளமாகவும், பல நூறு பணியாளர்களுக்கும்

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரமாக இருக்கும் மற்றும் பல்வேறு மறைமுக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் TTPS- ஐ அழிக்கும் செயல்கள்

தொடருமேயானால் பொதுமக்களின் சொத்தை பாதுகாக்கும் பொருட்டு

தூத்துக்குடியில் உள்ள மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த ஏதுவாகும் என்பதும்

இதன் மூலம் தெரியப்படுத்தப்படுகின்றது.

26.05.2022

சமுக ஆர்வலர் S. ஜெபராஜ் டேவிட் இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.

மனுநகல்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக