கழுகுமலை பழங்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள முள்காட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை விசாரிக்க முற்பட்ட போது அதில் ஒருவர் கையில் தனது வைத்திருந்த கத்தியை காட்டி போலீசாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடியுள்ளார்
அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது - 350 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 7000/- பணம் பறிமுதல்.
தூத்துக்குடி லீக்ஸ்:- 26.05.2022
இதுபற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் உத்தரவுபடி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் இன்று (26.05.2022) கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார கள்.
அப்போது கழுகுமலை பழங்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள முள்காட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை விசாரிக்க முற்பட்ட போது தீடீர் என அதில் ஒருவர் கையில் தனது கத்தியை காட்டி போலீசாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடியுள்ளார்.
உடனடியாக மற்ற இருவரையும் மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கரடிகுளம் சின்ன காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாடசாமி (எ) மகேஷ்குமார் (27), கரட்டுமலை தெற்கு தெருவைச் சேர்ந்த ரத்தினசாமி மகன் முத்துசெல்வம் (21) மற்றும் தப்பியோடிவர் இனாம்மணியாச்சி நடுத்தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் மகேஷ்குமார் (35) ஆகியோர் என்பதும், அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரிகள் மாடசாமி (எ) மகேஷ்குமார், முத்துசெல்வம் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 350 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 7000/- பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பாராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தலைமறைவான மகேஷ்குமாரை தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக