சனி, 28 மே, 2022

தூத்துக்குடியில் பெண்ணை பற்றி வாட்ஸ் அப்பில் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசியவர் கைது தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.

 தூத்துக்குடி லீக்ஸ்:- 28.05.2022

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் தன்னுடன் பணிபுரியும் ஓட்டப்பிடாரம், இளவேலங்கால், அயிரவன்பட்டி பகுதியை சேர்ந்த சிம்சோன் மகன் ராஜ் (36) என்பவர் தன்னை பற்றி மிகவும் ஆபாசமாகவும், கேவலமாகவும், தரக்குறைவாகவும் உடன் பணிபுரியும் அலுவலர்களுடன் வாட்ஸ்அப்பில் தொடர்ந்து பேசி தனக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரிடம் புகார் அளித்துள்ளார்.


மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் . பாலாஜி சரவணன் தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன்  மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன், உதவி ஆய்வாளர் சுதாகரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மேற்படி பெண்ணை பற்றி வாட்ஸ்அப்பில் ஆபாசமாக பேசியவரை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.


அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு இன்று (28.05.2022) ஓட்டப்பிடாரம் ரஅயிரவன்பட்டி பஸ் ஸ்டாப்பில் வைத்து மேற்படி ராஜ் என்பவரை கைது செய்தனர்.

கைதான ராஜ்


மேலும் இவ்வழக்கானது தொடரந்து விசாரணையில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக