தூத்துக்குடி லீக்ஸ்:-24-05-2022
உயிர்ச்சூழல் காக்க களமாடி படுகொலையுண்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு 4 ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று 24-5-2022 தெற்கு கடற்கரைச் சாலை, தூத்துக்குடிபெல் ஹோட்டல் கூட்டரங்கத்தில் மாலை 4மணிக்கு உயிர்ச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
மேதா பட்கர் |
இந்த நிகழ்ச்சியில்
மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு சார்பில் மேதா பட்கர் கலந்து கொண்டு ஆங்கிலத்தில் கருத்துரையாற்றினார்.
அஞ்சலி செலுத்திய போது.. அஞ்சலி செலுத்திய மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்,மகளிரணி செயலாளர்,பாராளுமன்ற துணைத் தலைவர், திமுக கனிமொழி கருணாநிதி மற்றும் எழுச்சி தமிழர், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல் திருமாவளவன் M.P
மாநில தலைவர் (SDPI )நெல்லை முபாரக்
ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம் தோழர் திருமுருகன் காந்தி
தலைவர், பச்சைத் தமிழகம் கட்சி முனைவர் சுப.உதயகுமாரன்
பூவுலகின் நண்பர்கள் கோ.சுந்தர்ராஜன் தூத்துக்குடி மாவட்டஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு தோழர் சுஜித்'மற்றும் கிட்டு (எ)கிருஷ்ணமுர்த்தி ,மெரினா பிரபு ,மகேஷ் ஆகியோர் நிகழ்ச்சி மேடையில் வேதாந்த ஸ்டெர்லைட்டையும் அதனால் தூத்துக்குடியில் நேர்ந்த துப்பாக்கி சூடு உயிர் இழந்த குடும்ப உறவுகளை வரவழைத்து அவர்கள் முன்னிலையில் நான்காவது ஆண்டு அஞ்சலி செலுத்தினர்.கண்ணீர் மல்க சம்பவங்களை நினைவுகூர்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் போராளி பேராசிரியை பாத்திமா பாபு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் தெர்மல் ராஜா நாட்டுப்படகு ரீகன், மற்றும் விடுதலை சிறுத்தைகள் மா.செ.இக்பால் மற்றும் கட்சி நிர்வாகிகள் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட தூத்துக்குடி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கனிமொழி எம்பி திருமாவளவன் எம்பி வரிசை யாக போராட்ட போராளிகள் படம் முன் ரோஜா பூ மல்லிகை மலர்களால் தூவி அஞ்சலி செலுத்தினர்
தூத்துக்குடி உயிர் சூழல் பாதுகாப்பு கருத்தரங்கு தீர்மானங்கள்
·
1 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் வாக்குறுதி அளித்தபடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறப்புச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றி கோருகிறோம்
2 மக்களை குற்றவாளியாக்க நினைக்கும் சிபிஐ விசாரணையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது.
பணியில் உள்ள நீதிபதிகளின் நேரடி மேற்பார்வையில் நேர்மையான அதிகாரிகளை கொண்டு விசாரணைக்குழுவினை அமைத்து குறுகிய காலத்தில் தூத்துக்குடியில் 15 உயிர்களை படுகொலை செய்த, நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் உடல் உறுப்புகளை சிதைத்த குற்றவாளிகளை கண்டறிந்து கொலைக் குற்ற வழக்கில் அவர்களை கைது செய்து கொலை குற்ற தண்டனை கிடைத்திட நடவடிக்கை எடுத்திடல் வேண்டும்
.
3 முத்துநகர் மக்களின் மூச்சுக்காற்றினை காத்திட மூச்சுக் காற்றினை விதைத்துச்
சென்ற 15 தியாகிகளுக்கு நினைவு மண்டபம் .
4 மே 22 ஐ சூழல் பாதுகாப்பு தியாகிகள் தினமாக கடைப்பிடித்தல் வேண்டும்.
5 தென் தமிழக மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் அழித்தொழிக்கும் வகையில் நெல்லை மாவட்ட கடற்கரையில் ஆறு அணுமின் நிலையங்களும் அணுக்கழிவு மையங்களும் மறுசுழற்சி ஆலையும் கொண்ட பூதாகரமான கூடங்குளம் அணுமின் பூங்காவுக்கு எதிராக மக்களுக்கு துணையாக தமிழக அரசு துணை நிற்க கோருகிறோம்
6 வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் கொண்டுவரப்படும் நியூட்ரினோ, கெயில்
எட்டுவழிசாலை, அனல் மின் நிலைய திட்டங்களை தவிர்த்து நீண்ட நிலைத்த
சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத தொழில் திட்டங்களை கொண்டு வர ஆவணம் செய்திடல் வேண்டும்.
.
7 கடற்கரையில் மனிதர்களால் கட்டப்படும் துறைமுகம், கப்பல்தளம் தூண்டில் வளைவு கடல் அரிப்பைத் தடுக்கும் கல் சுவர் போன்ற கட்டுமானங்களால் கடல்அரிப்பு மற்றும் மணல் குவியல் ஏற்பட்டு கடந்த 26 ஆண்டுகளில் தமிழ்நாடு மற்றும் கேரளா கடற்கரைகளில் கடலரிப்பு (EROSION)மற்றும் மணல் குவியல் Aaxrecon)
ஏற்பட்டு கடற்கரை பரப்பில் 40 சதவீதம் குறைந்துள்ளதாக Ministry Of Eanth Salence தெரிவித்துள்ளது.
இதனால் பல கடற்கரை கிராமங்கள் கடலில் மூழ்க வாய்ப்பிருப்பதால ஒன்றிய மாநில அரசுகள் கடல்சார் திட்டங்களை ஆய்வுக்குட்படுத்தி கடலையும் கடலோரங்களையும் கடல் தொழிலையும் பாழ்ப்படுத்தாத இயற்கையோடு இணைந்து செயல்படும் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்களை கருத்தரங்கு ரீதியாக ஒருமனதாக முன்வைக்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக