திருச்செந்தூரில் அதிமுக மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் யு.எஸ். சேகர் மீது பொய் வழக்கு பதிவு செய்து உள்ளார்கள் என்று
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் புகார் மனு அளித்தனர்.
தூத்துக்குடி லீக்ஸ் மே 25
அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளரும் வழக்கறிஞருமான யு.எஸ்.சேகர் நேற்றைய தினம் ஆறுமுகமங்கலம் கோவில் பிரச்சனை சம்பந்தமாக திருச்செந்தூரில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் மனு அளிக்க சென்றார். அப்போது அலுவலகத்தில் இருந்த ஆர்டிஓ உதவியாளர் தாசில்தார் ராமச்சந்திரன் என்பவர் அவர் தரப்பு நியாயங்களை கேட்டு அறியாமல் ஏதோ உள்நோக்கத்தோடு அவரோடு வாக்குவாதம் செய்ததோடு மட்டுமன்றி அதிமுக வழக்கறிஞர் என்ற ஒரே காரணத்திற்காக அவர் மீது திருச்செந்தூர் காவல் நிலையத்தில் பொய்யாக புகார் அளித்துள்ளார்.
இதனை கண்டித்தும் உண்மையை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தெரியப்படுத்தும் விதமாகவும் மேற்குறிப்பிட்ட தாசில்தார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கி. செந்தில்ராஜ் ஐஏஎஸ் இடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பாலாஜி சரவணன் ஐபிஎஸ் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது புகார்தாரர் வழக்கறிஞர் யு.எஸ்.சேகர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா. ஹென்றி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் மாநகராட்சி கவுன்சிலர் வீரபாகு, தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் பிரபு, மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம், இணைச் செயலாளர் செரினா பாக்யராஜ், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி, எம்பெருமாள், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே. பிரபாகர், மாநகரப் பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், நட்டார் முத்து, ஒன்றியச் செயலாளர் காசிராஜன், வழக்கறிஞர்கள் கோமதி மணிகண்டன், மாநகராட்சி கவுன்சிலர் மந்திரமூர்த்தி, வக்கீல் முனியசாமி, சரவண பெருமாள், செல்வின், குணசேகர், அதிமுக நிர்வாகிகள் ஜோஸ்வா அன்பு பாலன், வலசை வெயிலுமுத்து, ஐடியல் பரமசிவம், கேடிசி ஆறுமுகம், கேடிசி லட்சுமணன், கேஏபி ராதா, தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம், புல்டன் ஜெசின், பிராங்கிளின் ஜோஸ், சுந்தரேஸ்வரன், பரிபூரண ராஜா, வட்டச் செயலாளர்கள் சந்தனப்பட்டு, மணிகண்டன், சொக்கலிங்கம், மற்றும் பொன் சிங், தாசன், யூனியன் கவுன்சிலர் ரமேஷ், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக