தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு
ம தி மு க சார்பாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இதுபற்றிய செய்தியாவது:-
இன்று (22-5-2022) 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் பாலவிநாயகர் கோவில் தெருவில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரட்டத்தில் உயிரிழந்த 13 பேர்களின் படங்களுக்கு மலர் தூவி மேழுகுவர்த்தி தீபம் ஏற்றி நினைவஞ்சலி செய்யப்பட்டது.
இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணிச் செயலாளர் விநாயகா ஜி. ரமேஷ் மாநகர செயலாளர் முருகபூபதி மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன், மாநில தொண்டரணி துணை செயலாளர் பேச்சிராஜ், எம்எல்எப் மாநில பொருளாளர் அனல் செல்வராஜ், மாவட்ட மீனவர் அணி செயலாளர் தொம்மை, முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுந்தரராஜ், வட்ட செயலாளர் கே.ஏ.பி.குமார், எம்எல்எப் தூத்துக்குடி அனல்மின் நிலைய திட்ட செயலாளர் எபனேசர் தாஸ், மாநகர அவைத்தலைவர் செந்தாமரைக் கண்ணன், எம்எல்எப் மாநிலச் செயலாளர் சுப்பிரமணியன்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரனி துணை செயலாளர் சரவணப்பெருமாள். தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பொம்முதுரை. வேம்பன் முருகன். கோவில்பட்டி பரமேஸ்வரன் உள்ளிட்ட மதிமுகவினர் பலர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக