ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

அதிமுக மாவட்ட செயலாளர் தேர்தல் தூத்துக்குடியில் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் விருப்பு மனு பரபரப்பு

 அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி அமைப்பு தேர்தலில் நான்காம் கட்டமாக மாவட்ட கழக செயலாளர் மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தூத்துக்குடி பானு பிருந்தாவன் ஹோட்டல் ஹாலில் வைத்து நடைபெற்றது.  


வீடியோ பார்க்க

இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் மீண்டும் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பம் செய்தார்.


மனுவை மாவட்ட தேர்தல் நடத்தும் பொறுப்பாளர்களான மாநில மாணவரணி செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர். விஜயகுமார் மற்றும் தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தி.நகர் சத்தியா ஆகியோர் மனுக்களை பெற்றனர். 

அதே போல் அதிமுக மாவட்ட செயலாளர் தேர்தல் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் விருப்பு மனு அளித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



இந்நிகழ்வுகளின் போது கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஆறுமுக நயினார், மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, 






மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்டக் கழக அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஜோதிமணி, சத்யா லட்சுமணன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஹென்றி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, மாவட்ட நிர்வாகிகள்  செரினா பாக்கியராஜ், வசந்தா, சந்தனம், அமலி ராஜன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஏசாதுரை, யுஎஸ்.சேகர், பில்லா விக்னேஷ், டேக்ராஜா, கே.ஜே. பிரபாகர், ஜெ.தனராஜ், நடராஜன், சுதர்சன் ராஜா, தட்டார்மடம் ஞானப்பிரகாசம், பகுதி கழக செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், நட்டார்முத்து, ஒன்றியக் கழகச் செயலாளர்கள் இராமச்சந்திரன், காசிராஜன், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், தாமோதரன், செம்பூர் ராஜநாராயணன், விஜயகுமார், செளந்தரபாண்டி,   காயல் மௌலானா, நகர செயலாளர்கள் காசிராஜன், வேதமாணிக்கம், துரைசாமி ராஜா, அசோக்குமார், செந்தில் ராஜ்குமார், சோமசுந்தரம், ஆறுமுக நயினார், கிங்ஸ்லி, ரவிச்சந்திரன், செந்தமிழ் சேகர், கோபால் கிருஷ்ணன் வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன் கோமதி மணிகண்டன் முனியசாமி சரவண பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகளும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக