ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

ஸ்டாலின் ஆட்சி நீடிக்காது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பரபரப்பு பேச்சு அண்னா தொழிற்சங்க போக்குவரத்து நிர்வாகிகள் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் பேசினார்.

 ஸ்டாலின் ஆட்சி நீடிக்காது 24  வரை கூட தாங்காது.ஸ்டாலினால் அறிவித்த எந்த திட்டமும் ஒழங்காக செயல்படுத்த முடியல  அதிமுக கட்சி எழச்சியாக தான் இருக்குறது

கருணாநிதியால் அழிக்க முடியாத அ.தி.மு.க.வை

ஸ்டாலினால் அழிக்க முடியுமா?

 நம்ம ஆட்சியில் நாம பெத்த  குழந்தைக்கு இவங்க பெயர் சூட்டுவது போல

அதிமுக.ஆட்சி திட்டங்களுக்கு

ஸ்டீக்கர் ஒட்டி ஸ்டாலின் திறந்துவைக்கிறார் என சரமாரியாக தூத்துக்குடி மாவட்ட மண்டல அ.தி.மு.க. போக்குதுரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் ஆவேசமாக பேசினார்.





      


 தூத்துக்குடி மாவட்ட மண்டல அண்ணா போக்குவரத்து பிரிவு புதிய நிர்வாகி கற்பதவியேற்பு விழா தூத்துக்குடி ஹோட்டல் கெளரிசங்கர் கூட்ட அரங்கில் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடந்தது.

      தூத்துக்குடி தெற்கு, வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்கள் டேக் ராஜா, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

       கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் தூத்துக்குடி மாவட்ட நகர கிளை போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களுக்கு கைக்கடிகாரம், டைரி, பர்ஸ் வழங்கி பேசுகையில்...........

     ஆளும் கட்சியில் நாம் இல்லை என்றாலும், இவ்வளவு தொழிலாளர்கள் வந்து உள்ளனர்.

      நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நமக்கும், தி.மு.கவுக்கும் 3 1/2 % வாக்கு வித்தியாசம்தான். 75 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளோம்.

       கருணாநிதியால் அ.தி.மு.க.வை அழிக்க முடியாமல் தோல்வியைதான் சந்தித்தார்.ஸ்டாலின் இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கிறார். அது முடியாது, அதிமுக வலுவோடு உள்ளது.

     ஆளும் கட்சியாக இருந்தபோது எதிர்கட்சி நடத்திய போராட்டங்களை இங்குள்ள தொழிலாளர்கள் தோல்வி அடைய செய்தனர். நாம் எதிர்கட்சியாக உள்ளோம். உங்களுக்கு ஒன்று என்றால் நான்குரல் கொடுப்பேன்.நம்மோடு வழக்கறிஞர் அணி உள்ளது.

        தூத்துக்குடி மாவட்ட மண்டல அண்ணா போக்குவரத்து பிரிவு கிளை நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தொழிற்சங்க நிர்வாகிகள் போட்டிபோட்டு கலந்துகொண்டனர்.

     தேர்தல் நடத்தி இந்த மண்டல நிர்வாகிகளை மாநில அண்ணா தொழிற்சங்கம், போக்குவரத்து பிரிவு தேர்வு செய்ததது.

நம்மில் வேறுபாடு இல்லை. ஒற்றுமையாக செயல்படுவோம்.

    , பொங்கல் பரிசு வழங்கியதில் பல்வேறு குளறுபடி, பேசுவது ஒன்று செயல்படுவது ஒன்று தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்பர், மத்திய அரசு தொகுப்பில் நிலக்கிரி வரவில்லை. தமிழகம் மின்வெட்டில் தவிக்கிறது.

     கவர்னர் மீது கல்வீசி தாக்குகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு, இதை வைத்து இந்த அரசை கலைக்கலாம்.

      எப்போது தேர்தல் வந்தாலும் நாம் தான் ஆளும் கட்சி, இங்கு வருகை தந்த தொழிலாளர்கள் கழகத்திற்கு ஆதரவாக உழைக்க வேண்டும். ஒற்றுமையுடன் செயல்படுங்கள், கருத்துவேறுபாடுகளை களையுங்கள்.அ.தி.மு.க.ஆட்சி அமைய சபதம் ஏற்போம்.

     இவ்வாறு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசினார்.

     கூட்டத்தில் மாநில அண்ணா போக்குவரத்து பிரிவு தொழிற்சங்க துணைச்செயலாளர் வீரேசன், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட கழக அவைத்தலைவர் திருப்பாற்கடல், துணைச்செயலர் சந்தனம், இணை செயலாளர் செரீனா, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் வக்கீல்கள் யு.எஸ்.சேகர், சுகந்தன் ஆதித்தன், முனியசாமி, ஏசாதுரை, சத்யா இலட்சுமணன், நடராஜன், முருகானந்தம், பொன்னம்பலம், ஒன்றிய கழக செயலாளர்கள் காசிராஜன், செம்பூர்ராஜ் நாராயணன், விஜயகுமார், பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், மற்றும் கிளை போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

      தூத்துக்குடி மாவட்ட மண்டல அண்ணா போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் கல்வி குமார், லட்சுமணன் உட்பட புதிய நிர்வாகிகள் அனைவரும் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடிதெற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் பதிவியேற்றனர். அவருக்கு மாவட்ட கழக செயலாளர் சால்வை அணிவித்து கௌரவித்தார்.

      இதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கல்வி குமார், ஆதி வெள்ளையா, தொப்பை கணபதி முத்துகிருஷ்ணன், அரி, ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக