தூத்துக்குடி மாவட்டம்: 23.04.2022
தூத்துக்குடியில் ரவுடிகளிடம் கஞ்சா வாங்க வந்த சிறுவர்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம் எடுத்தார்கள். போலீசில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் சிக்கினர். போலீசார் அவர்களை கைது செய்தார்கள்..
இது பற்றிய செய்தியாவது -
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பாலாஜி மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையிலான போலீசார் நேற்று (22.04.2022) ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியை சேர்ந்தவர்களான ஆதிமூலம் மகன் முருகன் (எ) ஓட்டப்பல் முருகன் (24) மற்றும் வெட்டும்பெருமாள் மகன் ராஜா (38) ஆகிய 2 பேரும் என்பதும் அவர்கள் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களிடம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரிகள் முருகன் (எ) ஓட்டப்பல் முருகன் மற்றும் ராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மேற்படி எதிரி முருகன் (எ) ஓட்டப்பல் முருகன் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உட்பட 10 வழக்குகளும், புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என மொத்தம் 11 வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.
ஏற்கனவே ராஜா மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல், கஞ்சா விற்பனை உட்பட 5 வழக்குகளும், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஓரு வழக்கும் என மொத்தம் 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக