தூத்துக்குடி மாவட்டம்: 26.02.2022
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஒரு சமூக தலைவர் போன்று வேடம் அணிந்த சிறுமி வீடியோவை ஒரு முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதை பார்த்துவிட்டு அந்த சிறுமியை அடித்து கொலை செய்ய வேண்டும் என்று சமூகத்திற்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்ட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
சாதி, மத கலவரத்தை தூண்டும் வகையிலோ, சமுதாயத் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையிலோ சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை.
ஒரு சிறுமி தனியார் தொலைக் காட்சி நிகழ்ச்சிக்காக ஒரு சமூகத் தலைவர் போன்று வேடம் அணிந்த வீடியோவை ஒரு முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அதை பார்த்துவிட்டு .அந்தச் சிறுமியை அடித்துக் கொலை செய்யவேண்டும் என்று சமூகத்திற்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் கருத்து (Comment) பதிவிட்டுள்ளார்.
முகநூல் வந்த கமென்ட் |
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் அவர்களுக்கு உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்டவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் சுப்புராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டையாபுரம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் வெங்கடேஷ்குமார் பாபு என்பவர் ஒரு தலைவரை இழிவுபடுத்தும் வகையிலும், ஒரு சமூகத்திற்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையிலும் முகநூலில் கருத்து பதிவிட்டது தெரியவந்தது, இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்று சமுதாயத் தலைவர்களை இழிவுபடுத்தி சாதி, மதக் கலவரங்கள தூண்டும் வகையில் வன்முறையான செய்திகளையோ, புகைப்படங்களையோ மற்றும் வீடியோக்களையோ சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக