வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

தனது மகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட தூத்துக்குடி திமுக கிளை செயலாளர் படுகொலை வியாபாரிகள் கடை அடைப்பு இருவர் கைது ? காவல்துறையின் மெத்தன போக்குதான் காரணமா? குமுறல்

தூத்துக்குடி தாளமுத்துநகர் பாலதண்டாயுதநகரைச் சேர்ந்தவர் கண்ணன் (49), டெய்லர் தையல் கடை நடத்தி வருகிறார். 



இவர் அப்பகுதி திமுககிளைசெயலாளராகவும் மாப்பிள்ளையூரணிபஞ்சாயத்துஉறுப்பினராகவும் உள்ளார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவியும்  இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.


 இந்நிலையில் 24-02-2022 நேற்றிரவு வழக்கம் போல் தனது டெய்லர் கடையில்  இருந்த போது அங்கு வந்த மர்மநபர்கள் அவரை கத்தியால் தாக்கி படுகொலை செய்து விட்டு தப்பியோடினர்கள் .

  

தகவலறிந்து தூத்துக்குடிஎஸ்.பி. ஜெயக்குமார்,டவுன் டிஎஸ்பி கணேஷ், தாளமுத்து நகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, எஸ்ஐக்கள் சங்கர், சரண்யா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணன் உடலை மீட்டு,பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


போலீசின் முதற்கட்ட விசாரணையில் இந்தக்கொலையில் ஈடுபட்டது,

தூத்துக்குடிதாளமுத்துநகர்பாலதண்டாயுதநகரைச்சேர்ந்த ஜெயேந்திரன் (22),அதே ஊர் முத்துப்பாண்டிமகன் ரமேஷ்கண்ணன் (17),தூத்துக்குடி மட்டக்கடையைச் சேர்ந்த கணேசன் மகன் கவுதம் கண்ணன் (19) ஆகியோர் என்பதும்,திமுக பிரமுகர்கண்ணனின் மகளை இவர்கள் 3 பேரும் கேலி செய்தது குறித்து அவர் தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார். இப்படி இரண்டு முறை புகார் செய்துள்ளாராம்? ஆனால்? உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளது.

 காவல்துறை மெத்தன போக்கு ? அப்பகுதிவாசிகள் கூறுகிறார்கள்

இது தொடர்பாக  கொலை செய்ததும் தெரியவந்தது.

 இன்று காலையில் தூத்துக்குடி கோர்ட்டில் 3 பேரும் சரண் அடையஉள்ளதாக பரவிய தகவலையடுத்து கோர்ட்டையும் போலீசார் கண்காணித்தனர்


இந்நிலையில். .தூத்துக்குடி தாளமுத்து பகுதியில் தையல் கடை நடத்தி வந்த திமுக பிரமுகர் கண்னன் நேற்று படுகொலை செய்யப்பட்டது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதனால் தாளமுத்து நகர் பகுதியில் வியாபாரி கொலை தொடர்பாக வியாபாரிகள் அமைதி ஊர்வலம் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் இன்று 25-02-2022 கடையடைப்பு போராட்டம் செய்தார்கள்.




இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் இரவு சென்று பார்வையிட்டு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்  மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் முதல் நிலை காவலர்கள் ராமநாதன் மற்றும்  சுந்தர்சிங் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.

தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஜெயேந்திரேன் (22), த/பெ. தமிழரசன், பாலதண்டாயுத நகர், தாளமுத்துநகர் மற்றும் ரமேஷ் கண்ணன் (18) த/பெ. முத்துப்பாண்டி, பாலதண்டாயுதநகர், தாளமுத்துநகர் மற்றும் ஒருவருடன் சேர்ந்து முன்விரோதம் காரணமாக மேற்படி கண்ணனை கொலை செய்தது தெரியவந்தது.




 உடனே தனிப்படை போலீசார் ஜெயேந்திரேன் மற்றும் ரமேஷ் கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். 

மேலும் இது குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாகியுள்ள மற்றொரு எதிரியையும் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி லீக்ஸ் பதிவு.. - 25-02-2022


 





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக