திங்கள், 7 பிப்ரவரி, 2022

தூத்துக்குடி மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கோரிக்கை

  தூத்துக்குடி அரசு மருத்துவமனை நுழைவுவாயிலில் கிரசன்ட் பள்ளி அருகில் VVD சிக்னல் பகுதியில் ...

சுமார் ஒரு மாத காலமாக பாதாள சாக்கடை நிரம்பி ஆறுபோல் அரசு மருத்துவமனைக்குள் கழிவுநீர் செல்கிறது 



இதனால் அப்பகுதியில் துர்நாற்றம வீசுகின்றது .அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உடன் வருவோருக்கும் சேர்த்து நோய் தொற்று ஏற்படும் அபாய சாத்தியகூறு உள்ளது. 

இந்த வீடியோ பார்க்கவும்



வீடு வீடாக சென்று வீட்டினுள் தண்ணீர் தேங்கி கொசுப் புழுக்கள்  உருவாகிறதா என்று ஆராயும் தூத்துக்குடி மாநகராட்சி இதுவரை இதை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறது 


இதற்கு உடனடியாக தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறோம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக