திங்கள், 7 பிப்ரவரி, 2022

தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீடீர் தலைமறைவு மாநகராட்சி தேர்தலில் கடத்தல் மிரட்டலால் வேட்பு மனு வாபஸ்!!! திமுக அமைச்சர் கீதாஜீவன் தம்பி ஜெகன் தரப்பு மீது குற்றச்சாட்டு கூறி தூத்துக்குடி மாநகராட்சி முன்பு ஆர்ப்பார்ட்டம் நாம் தமிழர் கட்சியினர் பரபரப்பு பேட்டி

20 வ து வார்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட கோபி என்பவரை சிலர் வலுக்கட்டாயமாக கடத்தி மனுவை வாபஸ் வாங்க வைத்திருக்கின்றனர். 



இதனால் தூத்துக்குடி மாநகராட்சி 20 வது வார்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட கோபி கண்ணன் என்பவர் வேட்பு மனு இன்று வாபஸ் வாங்கியுள்ளார் என தூத்துக்குடி யில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடியில் திமுகவினர் வேட்பாளரை கடத்தி வாபஸ் வாங்க வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர் சா.கி.ராஜசேகர்   மற்றும்  வேல்ராஜ்  தலைமையில்  மாநகராட்சி  அலுவலகம்  முன்பு  ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. 



இதனைதொடா்ந்து நாம் தமிழர் கட்சி ராஜசேகா்  செய்தியாளா்களிடம்  பேசியதாவது:-   

தூத்துக்குடி  நாடாளுமன்ற  நாம்தமிழா்  கட்சியின்  பொருப்பாளரும்   தூத்துக்குடி  நாடாளுமன்றத்திற்குட்பட்ட   உள்ளாட்சி  தோ்தல்  பொறுப்பாளா்  என்கின்ற  முறையில்  மூன்று  நாட்களுக்கு  முன்பு   எங்களது  வேட்பாளா்  20  வது  வாா்டில்   கோபி  என்ற  மாடசாமி  மனு தாக்கல்  செய்தாா்.


  அன்றிலிருந்து  அதே  வாா்டில்  திமுக  சாா்பில்  மேயா்  வேட்பாளராக  போட்டிடுகின்ற  ஜெகன்   கீதாஜீவன்  அமைச்சருடைய  தம்பி இவங்களால்  மிரட்டல்கள்  அதிகமாகி  கொண்டே  வந்தது  இரண்டு  தினங்களுக்கு முன்பு  எங்களது  வேட்பாளா்  சின்ன  ஒரு  ஒா்க்ஷாப் வைத்திருக்கின்றாா்.

அந்தக் கடை  முன்பு  பாட்டிலை  உடைத்துப் போட்டுள்ளனா்  அதற்கு  பிறகு  நேரடி  மிரட்டல்  காவல்துறை  கண்காணிப்பாளாிடம்  எங்கள்  கட்சியிலிருந்து  புகாா் பன்னினோம்   அதன் பிறகு  காவல்துறை  க்யூ பிரான்ஜியிலிருந்து  வந்து  விசாராித்தாா்கள்  எங்கள்  பொறுப்பாளா்களிடமும்  விசாாித்தாா்கள்  

நேற்று  (6-2-2022)மாலை  நடந்த  கூட்டத்திலும்  இருந்தாா்கள்.

6-02-2022 தேதி கூட்டத்தில்..
 
இன்று 7- 2 - 2022 காலையிலே   ஜெகனுடைய  ஆட்கள்  வந்து  வேட்பாளரையே  கடத்தி  கொண்டு  போய்விட்டாா்கள்   இதுவரைக்கும்  அலைபேசி  அனைத்து வைக்கப்பட்டிருக்கிறது  

மிரட்டல்கள்  வேட்பாளரை  மிரட்டி  கூட்டிக் கொண்டு  வந்து  வாபஸ்  வாங்க  வைத்துவிட்டாா்கள்  முன்மொழிந்தவா்களையும்  கொண்டு  வந்து  வாபஸ் வாங்க வைத்துவிட்டாா்கள்   இது வந்து  திமுகவினுடைய  அராஜகத்தின்  உச்ச  கட்டம்  என்றாா்.

இச்சம்பவத்தால்  தூத்துக்குடியில் மாநகராட்சி வேட்பாளர் மத்தியில் குறிப்பாக பெண் வேட்பாளர் இடையே ஒரு வித கிலியை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக