திங்கள், 7 பிப்ரவரி, 2022

நீட் விலக்கு மசோதா விவகாரம் ஆளுனரை கண்டித்து தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பார்ட்டம்.

அரசியலமைப்பு சட்டத்தை மீறி மக்களாட்சி மாண்பை புறந்தள்ளி கூட்டாட்சி தத்துவத்தை அவமதித்துள்ளார்கள்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்தும் ....ஆளுநர் பதவியை அரசியல் சாசனத்தில் இருந்து நீக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி போல்டன்புரத்தில் AIYF சார்பாக நடைபெற்றது



ஆர்ப்பாட்டத்திற்கு AIYF. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் P. சந்தன சேகர் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் செண்பகாராஜா, ஜீவா, பலவேசம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலக செயலாளர் தோழர் மாடசாமி, தோழர் சுப்பிரமணியன், சேகர், மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் அழகு முத்து பாண்டியன்  உரையாற்றி முடித்து வைத்தார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக