தூத்துக்குடி லீக்ஸ் : 20.02.2022
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் சாதி பெயரை கூறி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது - செய்யப்பட்டார்.
இது பற்றிய செய்தியாவது
ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லெட்சுமிபுரம் காயல்பட்டினம் பகுதியில் கடந்த 17.02.2022 அன்று முத்துராஜ் (53), த/பெ. வைணவபெருமாள், கீழலெட்சுமிபுரம் என்பவர் ஒரு குறிப்பிட்ட சாதி பெயரை கூறி அந்த சமூகத்தினரை அவதூறாக பேசியுள்ளார்.
இது குறித்து லெட்சுமிபுரம் ஊர்தலைவரான அதே பகுதியை சேர்ந்த மோகன் (53), த/பெ. ஹரிகிருஷ்ணன் என்பவர் முத்துராஜ் என்பவரிடம் கேட்டபோது அவரிடம் அப்படித்தான் பேசுவேன் என்று கூறி தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மேற்படி மோகன் என்பவர் இன்று (20.02.2022) அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருச்செந்தூர் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், இ.கா.ப அவருக்கு இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில், உதவி ஆய்வாளர் சதீஷ் நாராயணன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு மேற்படி சாதி பெயரை கூறி அவதூறாக பேசி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த மேற்படி எதிரி முத்துராஜ் என்பவரை இன்று கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்து சாதி மத ரீதியாக அவதூறாக பேசுவது, சமூக வலைதளத்தில் பதிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வன்முறையை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக