செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

குளத்தில் குளிக்க சென்ற போது சேற்றில் சிக்கி உயிரிழந்த இளம் பெண் மற்றும் சிறுவன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தூத்துக்குடி கனிமொழி எம்.பி. ஆறுதல் .

 தூத்துக்குடி மாவட்டம், வாகைக்குளம் அருகே உள்ள வர்த்தகரெட்டிபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகள் ஆஷாராணி (வயது 18) மற்றும் இதே பகுதியை சேர்ந்த அடைக்கலம் என்பவரின் மகன் அனந்தகிருஷ்ணன் (வயது 8) இருவரும் கடந்த (20/02/2022) அன்று, இப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்ற போது சேற்றில் சிக்கி உயிரிழந்தனர். 




இந்நிலையில், இன்று (22/02/2022) செவ்வாய்கிழமை, உயிரிழந்த சிறுவன் மற்றும் இளம்பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தி மு க மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி 


உடன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக