வெற்றி பெற்றதும் முதலில் கனிமொழி M.P. இடம் சென்றுஜெகன் பெரியசாமி ஆசி பெற்றார். |
தூத்துக்குடி மாநகராட்சியில் .. மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதற்கான தேர்தல் சென்ற 19-02-2022 ம் தேதி நடைபெற்றது.
தேர்தலில் 59.11 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் இன்று 22-02-2022 காலை எண்ணப்பட்டு அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டது....?
திமுக தரப்பில் விஜ.பி.வேட்பாளாராக 20-வது வார்டில் ஜெகன் பெரியசாமியும் அதிமுக தரப்பில் விஜ.பி.வேட்பாளராக 59-வார்டில் S.P.S.ராஜா -தேர்தல் களத்தில் நின்றதால் பரபரப்பு தொற்றியது தற்போது 20-வது வார்டில் ஜெகன் பெரியசாமியும் 59-வது வார்டில் SP.S.ராஜா சண்முகநாதனும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
60 வார்டில் திமுக 44 இடங்களை கைப்பற்றி தூத்துக்குடி மேயர் பதவி வாய்ப்பு பெறுகிறார் ஜெகன் பெரியசாமி.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. தபால் ஒட்டுக்கள் எண்ணப்பட்டனர். முதலில் இருந்தே திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்க தொடங்கினர்.
முடிவில் ...தூத்துக்குடி மாநகராட்சி திமுக கைப்பற்றியது
60 வார்டுகளில் ..
திமுக 44 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் 3,
கம்யூனிஸ்ட் 2,
முஸ்லிம் லீக் 1,
அதிமுக 6,
சுயேட்சை 4
என்ற ரீதியில் தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள்
நேற்று உலா வந்த கருத்து கணிப்பு பீதியால் திகிலில் உறைந்து இருந்தனர் இதனால் வஉசி அரசு கல்லூரிக்கு வெளியில் ஆவலுடன் காத்திருந்த கட்சியினர் மத்தியில் ஆரவாரம் எழந்தது. திமுகவினர் தங்களது வார்டுகளில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்து வந்தார்கள்.
தூத்துக்குடி புது பஸ் ஸாடாண்ட் வியாபாரிகள் வெற்றி பெற்ற மேயர் ஜெகன் பெரியசாமி சந்தித்துதங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர் |
வேட்பாளர்கள் வாக்கு பெற்ற முழு விவரம் யார்? யார்? எத்தனை ஒட்டு பெற்றனர் பார்க்கவும்.
1 - வது வார்டு
2 வது வார்டு
3-வது வார்டு
4 - வது வார்டு
5-வது வார்டு
6-வது வார்டு
7-வது வார்டு
8-வது வார்டு
20-வது வார்டு
59-வது வார்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக