வியாழன், 27 ஜனவரி, 2022

தோழர் என். சங்கரய்யா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். முதலமைச்சருக்கும், மருத்துவ குழுவினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்றி!


    கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யா அவர்கள் பூரண குணமடைந்து இன்று (22.01.2022) வீடு திரும்பினார்.



                தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மருத்துவக் குழுவை ஏற்பாடு செய்து உத்தரவிட்டதுடன் தொடர்ந்து உடல்நிலை குறித்து மருத்துவக் குழுவினரிடம் விசாரித்ததுடன், உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் ஸாடாலின் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



                தோழர் என். சங்கரய்யாவை நேரில் சென்று பார்வையிட்டு உடல் நலம் விசாரித்த  மாண்புமிகு. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களுக்கும், தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர்  ஜெ. ராதாகிருஷ்ணன் அவருக்கும், சிறந்த முறையில் சிகிச்சையளிப்பதற்கு ஏற்பாடு செய்த சென்னை, ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை டீன் டாக்டர். தேரணிராஜன் அவர்களுக்கும், அவரது தலைமையிலான மருத்துவ குழுவினருக்கும், செவிலியர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

(கே. பாலகிருஷ்ணன்)மாநில செயலாளர்


Communist Party of India (Marxist)

Tamilnadu State Committee

P.R. Ninaivagam

No: 27, Vaidhyaraman Street

T.Nagar, Chennai - 600 01

Ph.: 044 + 24326800 / 900

Fax: 044 + 24341294



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக