தூத்துக்குடியில் இரு சக்கர வாகனத்தை திருடியவர் அங்கிருந்து வெளியூர் தப்பி செல்கையில் .....? சுங்க சாவடி சோதனையில் உடனடியாக கைது - ரூபாய் 1,20,000/- மதிப்பிலான இருசக்கர வாகனம் மீட்கப்பட்டது
தூத்துக்குடி மில்லர் புரத்தில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் (47) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை (TN 69 BJ 0907 Honda Unicorn) இன்று (04.01.2022) தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் அருகே நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கும்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனது.
இதுகுறித்து பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மாவட்டம் முழுவதும் சோதனை சாவடிகள் உஷார்படுத்தப்பட்டது.
இந்நிலையில் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மேற்படி பாலசுப்பிரமணியனின் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் பெரியராமர் (28), த/பெ. ராஜேந்திரன், கிருஷ்ணாபுரம், உசிலம்பட்டி, மதுரை என்பதும் பாலசுப்ரமணியனின் இருசக்கர வாகனத்தை திருடி வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் வழக்குப்பதிவு செய்து எதிரி பெரியராமரை கைது செய்து, அவரிடம் இருந்து திருடப்பட்ட ரூபாய் 1,20,000/- மதிப்பிலான இரு சக்கர வாகனமும் மீட்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக