தூத்துக்குடியில் முக்கிய வீதியில் (விக்டோரியாசாலை) உள்ள புத்தகம் & வெற்றிலை விற்கும் பெட்டி கடை ராஜா என்பவர் பல வருடமாக நடத்தி வருகிறார்.
இன்று காலை (4 -01-2022 ) கடையை திறக்க வந்த போது கடை இடித்து தள்ளப்பட்டு கடை திறந்த நிலையில் கிடந்தததால் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார் சம்பவ இடத்தை நேரில் வந்து பார்வையிட்டார்கள். உடன் வஉசி வியாபார சங்கம் நிர்வாகிகளும் வந்து இருந்தார்கள்.
நேற்றிரவு அப்பகுதியில்
ஜேபி வண்டி நடமாட்டம் தெரிந்ததா? என சிசிடிவி கேமிராவை புட்டேஜ்-ஜ ஆய்வு பண்ணி வருகிறார்கள்.
தற்போது இக்கடை காயல்பட்டினம் குத்துக் கல் தெருவில் உள்ள நூர் முகமது வாங்கியுள்ளாராம்.
வாடகைதாரர் - ராஜா கடந்த மாத வாடகையை கூட செலுத்தி வந்துள்ளார்
இந்நிலையில் இச்சம்பவம் கடை இடிக்கப்பட்டு கிடப்பதால் ... ஏதேனும் பணம் திருடு போனதா? தெரியவில்லை.
அவருடைய வாழ்வதாரம் பறிபோய்விட்டதாக மிகவும் கண் கலங்கி போயுள்ளார் ராஜா.
இது குறித்து அவர் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளார்.
இதனால் அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக