தூத்துக்குடியில் அதிமுக மூத்த கட்சி தொண்டர்கள் ஆனந்த கண்ணீரை வரவழைத்து அதிமுகவினரை நெகழ்ச்சியடைய வைத்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இது பற்றிய தூத்துக்குடி லீக்ஸ் செய்தியாவது:-
தூத்துக்குடி கனி கூட்டரங்கில் 26 - 12-2021 அன்று அதிமுகவில்1972 - லிருந்து கட்சி இருந்தவரும் மூத்த தொண்டர்களை கௌரவித்து விருது வழங்கும் விழா எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் சத்யா இலட்சுமணன் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் மற்றும் திரளான அதிமுகவினர் கலந்து கொண்டார்கள்.
தமிழகத்தில் அதிமுக கட்சியில் எம் ஜி ஆர் ரசிகராகவும் 1972 ல் அவர் கட்சி ஆரம்பித்ததும் அதில் தொடர்ந்து அதிமுக கட்சி உறுப்பினராக இருந்து வருகின்றார்கள் இன்றளவில் புதியதாக வந்தவர்கள் மாற்று கட்சியில் இருந்து அதிமுக வுக்கு வந்தவர்களெல்லாம் கிடு கிடு வென மேலெறி சென்று விட்டார்கள். ஆனால் எம் ஜி ஆர் காலத்திலிருந்து தீவிர ரசிகராக கட்சியின் அடிமட்ட தொண்டராக நிர்வாகிகளாக கட்சிக்காக அடி உதை சித்ரவதை பட்டு அப்போது அதிமுக வை திமுக எனும் பெரிய எதிர்சக்தியிடம் இருந்து அதிமுகவை காப்பாற்றி வளர்த்தெடுத்தார்கள்.
எம் ஜி ஆர் மறைவுக்கு பின் செயலலிதா கால கட்டத்தில் அன்று புதியவர்கள் வாய்ப்பு பெற்று வருகையில்
எம் ஜி ஆர் ரசிக தொண்டர்கள் முக்கியத்துவமின்றி நினைத்து வெளிப்படையாக பெருமூச்சு விட்டார்கள்
கிட்டதட்ட எம் ஜி ஆர் திரை படங்களில் நடித்த படத்திற்கு ஆரவாரம் பண்ணி கட்சி ஆரம்பித்தும் தொண்டராகி வளர்த்தெடுத்தவர்கள் இப்போது வயது 70 ஜ தாண்டி விட்டார்கள். இருப்பினும் அதிமுக வில்தான் ஒரு வித சோக மன நிலையில் இருக்கிறார்கள் எம் ஜி ஆர் பிறந்த நாள் - நினைவு நாளில் தான் இவர்கள் வெளியே வருகிறார்கள்
தற்போது 2021 -ல் பாரத ரத்னா எம்.ஜி.ஆர். கண்ட
அ.இ.அ.தி.மு.க. 50வது ஆண்டு பொன்விழா நடந்து வருவதை முன்னிட்டு
1972ம் ஆண்டு முதல் எம்.ஜி.ஆர். ரசிகராகவும், அ.இ.அ.தி.முக.வில்
தொடர்ந்து உறுப்பினராகவும் இருந்து வரும்
மூத்த தொண்டர்களை கௌரவிக்கும் விழா
இடம்: தூத்துக்குடி நாள் : 26.12.2021 மாலை 6 மணியளவில் நடைபெற்றது. அதிமுகவின் மூத்த கட்சி தொண்டர்களை தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் விருது வழங்கி கெளரவித்தார்.
இந்நிகழ்ச்சி
தலைமை: தூத்துக்குடி மு. பாலகிருட்டிணன்
(நெல்லை, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற முன்னாள் பொறுப்பாளர்) அடுத்து
S. S மணி
(நெல்லை, தூத்துக்குடி ஒருங்கிணைந்த
எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் தலைவர் &
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் பொருளாளர் ) மற்றும்
R.சுதாகர் (தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க தலைவர்) ஆகியோர் விழா விருது வழங்குவதில் சிறப்பு அழைப்பாளர்களாக பொறுப்பு வகித்தனர்.
தூத்துக்குடி எம் ஜி ஆர் ரசிகர் மன்றம் சார்பாக
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை சத்யா இலட்சுமணன் சிறப்பாக செய்திருந்தார்
பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மகளிர் களுக்கு சேலை அரிசி - சில்வர் தட்டு வழங்கப்பட்டது.
மேலும் அதிமுக மூத்த கட்சி தொண்டர்களுக்கு கெளரவித்து விருது வழங்கிய பின்பு அவர் களுக்கு அதிமுக கட்சி கரை போட்ட வேட்டி சட்டை துண்டும்அதிமுக மூத்த கட்சி தொண்டர்களுக்கு வழங்கினார்கள்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி சண்முகநாதன் எம் ஜி ஆரின் மூத்த கட்சி தொண்டர்களின் பெருமைகளை கூறி அவர்களை கெளரவித்து ஒவ்வொருவருக்கும் விருது வழங்கிய போது கட்சி தொண்டர்கள் மிகவும் நெகழ்ச்சி யடைந்து போனதும் .... வாழ்நாளில் அதிமுக கட்சியில் நாமும் சாதித்து விருது வாங்கி விட்டோம் என மனநிறைவு தந்ததாக தெரிவித்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக