தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியில் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சி செய்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து செய்தியாவது :
கடம்பூர் பகுதியில் வெங்கடேஸ்வரபுரத்தில் வசித்து வரும் முத்துராஜ் (21), த/பெ. செங்கையா இவர். 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்படி எதிரி முத்துராஜை கைது செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக