ஞாயிறு, 26 டிசம்பர், 2021

ஐந்திணை தென் தமிழியல் ஆய்வு சார்பாக தேசிய கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா

 கன்னியாகுமரி  மாவட்டத்தில் விவேகானந்தா கேந்திராவில்  ஐந்திணை தென் தமிழியல் ஆய்வு  சார்பாக தேசிய கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா  நடைபெற்றது.



ஐந்திணை தென் தமிழியல் ஆய்வு மன்றம் நீயே உன்னால் உனக்காக அறக்கட்டளை சார்பாக ஆய்வுகளில் தமிழும் , தமிழில் ஆய்வுகளும் தேசிய கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கினார்கள்.

இந்த விழாவிற்கு சாகித்யா அக்காதமி விருது  பெற்ற எழுத்தாளர். பொன்னீலன்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  விருதுகளை  வழங்கினார்.

நிகழ்ச்சியின் முன்னதாக குமரி மாவட்ட கிராமியக்கலைகள் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் கலைசுடர்மணி.S லட்சுமி கணேஷ், குத்துவிளக்கு ஏற்றி இறைவாழ்த்து பாடல் பாடி தொடங்கி வைத்தார்.

T.P.S.குட்டிராஜ்  தலைமையில் நாதஸ்வர இசைக்கலைஞர் குழுவினர் மங்கள வரவேற்பு இசை நிகழ்த்தினர்.

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் சீதா லெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி  பொருளியல் துறை தலைவர் முனைவர். இரா.நாகேஸ்வரி தலைமை உரை ஆற்றினார்கள்.

ஆய்வுகளில் தமிழும், தமிழில் ஆய்வுகளும் தேசிய கருத்தரங்கத்தில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை    பேராசிரியர் மற்றும் இயக்குனர் முனைவர்.குமரேசன்  மற்றும் காரைக்குடி  அழகப்பா அரசு கலைக்கல்லூரி   தமிழ் உயராய்வு மையத்தின் உதவிப் பேராசிரியர்முனைவர் அ.பாரதிராணி சிறப்புரை ஆற்றினார்கள்.

அதன்பின்பு கல்வி , அறிவியல் , இலக்கியம் , ஆய்வு , சேவை போன்ற பணிகளில்  சிறப்பாக செயல்பட்டதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அடுத்து  இதயா மகளிர் கல்லூரி வணிகவியல் துறை தலைவர் முனைவர். செ .செல்வராணி  நன்றியுரை ஆற்றினார்.  

இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஐந்தினை தென் தமிழியல் ஆய்வு மன்ற அமைப்பாளரும்  "நீயே உன்னால் உனக்காக அறக்கட்டளையின் நிறுவனருமான பேராசிரியை முனைவர்.சுபத்ரா செல்லத்துரை சிறப்பாக செய்திருந்தார்.

 thoothukudi leaks 27 - 12-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக