வியாழன், 16 டிசம்பர், 2021

குண்டர் தடுப்பு சட்டத்தில்தூத்துக்குடி அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு !!! தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியை திமுக கைப்பற்றுமா?. அதிமுக வினர் அதிர்ச்சி!!!

தூத்துக்குடி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் மகன் ஞான்ராஜ்ஜெபசிங் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



இதுபற்றிய செய்தியாவது:-

விரைவில் வரப்போகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி கைப்பற்றி ஆக வேண்டும் என அதிமுக வினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். 

தூத்துக்குடி ஒரு பகுதி அதிமுகவினர் மத்தியில் மாநகராட்சி மேயர் வேட்பாளராக பட்டங்கட்டி வலம் வந்தவர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மகன் ஜெபசிங்.இதற்காக அதிமுக  கட்சி பணிகளில்  ஆர்வமுடன் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 1 கோடி மதிப்பிலான முந்திரி பருப்புடன் கண்டெய்னர் லாரியை கடத்திய வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் மகன் சிக்கி விட்டார்.


கடந்த 26.11.2021 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டலுரணி விலக்கு பகுதியில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியிலுள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து ரூபாய் 1,10,00,000/- மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றி கொண்டு வந்த மேற்படி லாரியை Renault Triber TN 69 BL 5555  என்ற காரில் வந்து வழிமறித்து லாரி ஓட்டுநரான ஹரி (40) த/பெ. வைகுண்டம், ஆலங்குளம், திருநெல்வேலி மாவட்டம் என்பவரை தாக்கி, அவரையும் லாரியையும் கடத்தி சென்றார்


 இதுதொடர்பாக புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் 1) ஞானராஜ் ஜெபசிங் (39) த/பெ. செல்லப்பாண்டியன், வழக்கில் கைது செய்தார்கள்.



இவருடன் அன்னை தெரசா நகர், தூத்துக்குடி,  2) விஷ்ணுபெருமாள் (26) த/பெ. சக்திவேல், பிரையண்ட்நகர், தூத்துக்குடி,  3) பாண்டி (21), த/பெ. முனியசாமி, நேசமணி நகர், முள்ளக்காடு, 4) மாரிமுத்து (30), த/பெ. கணபதி, எம்.ஜி.ஆர் நகர் பாலம், தூத்துக்குடி, 5) செந்தில்முருகன் (35), த/பெ. வேலு, முத்துவிநாயகர் கோவில் தெரு, முறப்பநாடு, 6) ராஜ்குமார் (26), த/பெ. துரைகிருஷ்ணன், மிலிட்டரி லைன் தெரு, பாளையங்கோட்டை, 7) மனோகரன் (36) த/பெ. சேகர், பிள்ளையார் கோவில்தெரு, மட்டக்கடை, தூத்துக்குடி  ஆகிய 7 பேரையும் கைது செய்தார்கள்.


அத்துடன்  ரூபாய். 1,10,00,000/- மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பு அதனை  ஏற்றி கொண்டு வந்த ரூபாய் 10,00,000/- மதிப்பிலான கடத்தப்பட்ட லாரியையும் மற்றும்  கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மகன் ஜெபசிங் காரையும் பறிமுதல் செய்தனர்.தூத்துக்குடி மாவட்ட காவல்துறை.


தூத்துக்குடி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரை யின் பேரில்  மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப  இன்று 16-12-2021  தூத்துக்குடி அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் ஞானராஜ் ஜெபசிங் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். 


அவரது உத்தரவின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் மேற்படி அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் இன்று ( 16-12-2021)ஞானராஜ் ஜெபசிங்கை குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்கள்.

இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் அதிமுக வேட்பாளர் என வலம் வந்தவர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதால் ?தூத்துக்குடி திமுக மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டி பெரிதாக இருக்காது பணம் செலவு செய்ய மாட்டார்கள்.? ‌‌ எனவே இந்த தடவை எளிதாக திமுக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றிவிடும் என திமுகவினர் பெரிதான திட்டத்தில் உள்ளார்கள்.

முக்கிய குறிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில்இந்த ஆண்டு 2021இதுவரை சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 183 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக