கழுகுமலை பகுதியில் ரூபாய் 2 ½ லட்சம் மதிப்புள்ள 385 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக காரில் ஏற்றி வந்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டு ள்ளார்கள் அத்துடன் புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுபற்றிய விரிவான செய்தி யாவது ...
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின்பேரில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் கழுகுமலை காவல் நிலைய காவல் ஆய்வாளர் கஸ்தூரி தலைமையில் உதவி ஆய்வாளர் காந்திமதி, தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் ரவிக்குமார், நாலாட்டின்புதூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் ரமேஷ், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் அருண் விக்னேஷ் மற்றும் கழுகுமலை காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் சுப்புராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று (10.12.2021) கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழுகுமலை முனியசாமி கோவில் தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் இருந்த 1) சேர்மராஜ் (24) த/பெ. ஜெயராஜ், முனியசாமி கோவில் தெரு, கழுகுமலை மற்றும் 2) ஆனந்தகுரு (30) த/பெ. நாராயணன், முனிசாலை, மதுரை ஆகிய 2 பேரும் சேர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரிகள் 2 பேரையும் கைது செய்து ரூபாய் 2,54,000/- லட்சம் மதிப்பிலான 385 கிலோ புகையிலைப் பாக்கெட்டுகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் (TN 64 W 8553 Maruti Eco) பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கழுகுமலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக