கொலைகாரன் ஆசிஷ் மிஸ்ராவை கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட அலுவலகம் முன்பு இன்று காலை ஆர்ப்பார்ட்டம் நடத்தினார்கள்.
உத்திரபிரதேசம் லக்கிம் பூரில் விவசாயிகள் நடத்திய ஆர்பாட்டத்தில் காரை ஏற்றி விவசாயிகளை படுகொலை செய்த கொலைகாரன் ஆசிஷ் மிஸ்ராவினை கைது செய்திடவும் அவனது தந்தை அஜய் மிஸ்ராவினை ஒன்றிய இனை அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும் இன்று 07-10-2021 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகம் முன்பு தோழர் மாடசாமி தலைமையில் கன்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் CPI மாவட்ட செயலாளர் தோழர் அழகுமுத்து பாண்டியன் கண்டன உரையாற்றினார்
ஆர்பாட்டத்தில் AlYF மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பெ.சந்தனசேகர் , தோழர்கள் சுப்பிரமணியன், PM முனியசாமி, பாலசிங்கம் , மாரிமுத்து , கோபால் , கிருஷ்னமூர்த்தி, தாமரை, முத்தையாபுரம் காளி , பலவேசம் மற்றும் பலர் கலந்து கொன்டார்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக