வெள்ளி, 8 அக்டோபர், 2021

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு!!!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி, VVD சாலை, ஜெயராஜ் சாலை, பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் கழக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி.







உடன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதா ஜீவன் எம்எல்ஏ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ, 

கனி மொழி எம்.பி. பேட்டி 

திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக