சனி, 9 அக்டோபர், 2021

கோவில்பட்டியில் தாய், மகள்கள் 3 பேர் தற்கொலை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை



கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி ராஜீவ்நகர் 3வது தெருவை சேர்ந்த முத்துராமன் என்பவரது மனைவி முத்துமாரி (40) என்பவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 15 வருடமாக பிரிந்து தனது மகள்களான யுவராணி (21) மற்றும் நித்யா (17) ஆகியோருடன் தனியாக வசித்து வந்தனர். 


இந்நிலையில் மேற்படி 3 பேரும் தங்களது வீட்டில் நேற்று (08.10.2021) தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.


இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு   கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர்  உதயசூரியன்  உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.


 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேற்படி 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் கோவில்பட்டி  மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக