ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

தூத்துக்குடியில் டீ கடையை அடித்து நொறுக்கி ரவுடிகள் அட்டகாசம்!!! காவல்துறை ரவுடிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வேண்டுகோள்!!!

 வேண்டுகோள் விடுக்கின்றோம்... தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை (இ).



தூத்துக்குடியில் தாளமுத்துநகர் பகுதிக்கு உட்பட்ட ஆரோக்கியபுரம் பகுதியில் உள்ள டீ கடையை (29.08.2021) நேற்று மாலை அடித்து நொறுக்கிய ரவுடிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.


பெருந்தொற்று கொரானாவினால் தொடர்ந்து வணிகர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இதுபோன்ற ரவுடிகளால் மென்மேலும் வணிகர்கள் பாதிக்கப்படும் நிலையை ஒருபோதும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அனுமதிக்காது.


காவல்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தவறும் பட்சத்தில் வணிகர்கள் கடுமையான பதற்றத்துக்குள்ளாகி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதனையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை (இ) சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.



என்றும் சங்கப் பணியில்

சொ.ராஜா B.A., L.L.B.,

மாநில அமைப்பாளர் (இ)

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக