சத்தியம் தொலைகாட்சி தாக்குதலை கண்டித்தும் தாக்கிய ராஜேஷ் குமாரை குண்டர் தடுப்பு
ச ட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தூத்துக்குடியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை & தொலைகாட்சி கூட்டடைப்பு சார்பாக இன்று 23-08 -.2021 காலை 10 மணியளவில் மாவட்ட தலைவர் அ. பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளாராக தமிழ்நாடு பத்திரிக்கையாளர் தொழிற் சங்க பொதுசெயலாளர் இதழாளர் அய் கோ கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார். பின்பு மாவட்ட செயலாளர் M.மார்க் மகேஷ் , கோவில்பட்டி காளி தாஸ், உட்பட பலர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் 50 மேற்பட்டவர்கள் பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டார்கள்.
ஆர்ப்பாட்டம் பின்பு துத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு பத்திரிக்கையாளர் நலன் குறித்து கோரிக்கை வைத்தார்கள்.
அதன் விவரமாவது:-
உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
கோரம்பள்ளம்
தூத்துக்குடி
சத்தியம் தொலைகாட்சியை தாக்கிய ராஜேஸ்குமாரை குண்டர்
தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்
தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் அரசு
அடையாள அட்டை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
கோவிட் 19 நிவாரண தொகை விடுபட்ட பத்திரிகையாளர்களுக்கு
உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
பத்திரிகையாளர்களுக்குமானிய
விலை
வீட்டுமனை
உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகல்
மாவட்ட ஆட்சியர்
மாநில செய்தி துறை செயலாளர்
மாண்புமிகு செய்தி துறை அமைச்சர்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் செய்தி துறை அலுவலர்
இவ்வாறு தெரிவித்தார்கள். Video பார்க்க...




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக