தூத்துக்குடி லீக்ஸ் 22.08.2021
தூத்துக்குடி மாவட்டம் தருவை மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்துகொண்டு தங்க பதக்கம் வென்ற தூத்துக்குடியை சேர்ந்த மாணவர் சந்தோஷ் குருநாதனை பாராட்டும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
![]() |
| தாய்- தந்தை மற்றும் எஸ்.பி. உடன் தங்கப்பதக்கம் பெற்ற சிறுவன் சந்தோஷ்குருநாதன் |
தூத்துக்குடி மாவட்டம் தருவை மைதானத்தில் 14.08.2021 அன்று நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் 5 வயதுக்குட்பட்ட பிரிவில் மாநிலம் முழுவதும் இருந்து மொத்தம் 22 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
இதில் தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த குருராஜா என்பவரது மகன் சந்தோஷ் குருநாதன் என்ற 5 வயது மாணவன் சிலம்பாட்ட போட்டியில் கலந்துகொண்டு தங்க பதக்கம் வென்றுள்ளார்.
இவரை பாரட்டும் நிகழ்ச்சி (22.08.2021) அன்று தூத்துக்குடி சிவன்கோவில் அருகே உள்ள கவிதா மஹாலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
S.P. -க்கு வரவேற்பு
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேசுகையில்...
தங்க பதக்கம் வென்ற சந்தோஷ் குருநாதன் மற்ற மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
இவர் வருங்காலத்தில் மிகச்சிறந்த சாதனையாளராக விளங்குவார்.
இந்த சிறுவயதிலேயே பெற்றோர்க்கு பெருமை தேடி தந்துள்ளார்.
5 வயதிலேயே நமது பாராம்பரிய கலையான சிலம்பத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு மிக சிறந்த பயிற்சி பெற்று போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை தேடிதந்துள்ளார்.
மேலும் இவர் சிலம்பத்தில் இன்னும் நிறைய கற்றுகொண்டு எதிர்காலத்தில் இதேபோன்று பல போட்டிகளில் கலந்துகொண்டு மென்மேலும் பல வெற்றிகள் பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் சந்தோஷ் குருநாதனின் தந்தை குருராஜா, தாயார் யுவராணி, கீதா செல்வமாரியப்பன், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ், உதவி ஆய்வாளர் முருகபெருமாள் மற்றும் சிறுவனின் உறவினர்கள் பலர் கலந்துகொண்டனர்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக