திங்கள், 26 ஜூலை, 2021

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் டாஸ்மாக் ஊழியர் தீ குளிக்க முயற்சி

 


 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் இன்று (26-07-- 2021) காலை டாஸ்மாக் ஊழியர்  ஒருவர் வந்தார். அப்போது தீடீரென சலசலப்பு உண்டாக...  

  தீ குளிக்க முயன்றார் இதனால் அப்பகுதியில் பரபரப்பு உண்டாகியது.


தீ குளிக்க முயற்சித்த...வீடியோ

இது பற்றிய தகவலாவது:-

     தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று டாஸ்மாக் ஊழியர் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

     தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா சிவஞானபுரம் டாஸ்மாக்   கடை எண் 10138 ல் பணிபுரிந்து வரும் விற்பனையாளர்  நாகராஜன் தூத்துக்குடி மாவட்ட டாஸ்மார்க் மேலாளர் ஐய்யப்பனிடன் பணிமாறுதல் கோரி ஓராண்டுகாலம் வற்புறுத்திவந்தாராம்.

     இவரை பணிமாறுதல் செய்ய மேலாளர் அய்யப்பன், ஏ.எம்.ஆர்.வி.ஈஸ்வர் மூர்த்தி ஆகியோர் முன்வராததை...கண்டித்து இன்று கலெக்டர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக