திங்கள், 26 ஜூலை, 2021

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.நிர்வாகிகள்கூட்டத்தில் தீர்மானம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பங்கேற்பு!!!

தூத்துக்குடி லீக்ஸ்  26-07- 2021

     அ.தி.முக. தலைமை அறிவித்த 28ந் தேதிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான அ.தி.மு.க.நிர்வாகிகள் பங்கேற்கதூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க, நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

     சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, கழக ஒருங்கினைப்பாளரும், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கு இணங்க தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி டூவிபுரம் அ.தி.மு.க. மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பாற் கடல் தலைமையில் நடைபெற்றது.



    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்குமாவட்ட அ.தி.முக.செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

   


 தி.மு.க.தேர்தல்கால வாக்குறுதிகளானகுடும்ப தலைவிக்கு௹1000 வழங்காததை யும்,, விலைவாசி கட்டுப்படுத்தவும், நீட் தேர்வை ரத்து செய்யஉட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்துவருகிற 28ந்தேதி  மாவட்ட நிர்வாகிகள் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனமுடிவு எடுக்கப்பட்டது.




     கூட்டத்தில் அ.தி.மு.க. மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர்,மாவட்ட அ.தி.முக. துசெயலாளர் சந்தனம் மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் அமலி ராஜன், இளைஞர் அணி செயலாளர் வீர பாகு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்ராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அமிர்த கணேசன்,  இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெ.தனம், மாணவரணி செயலாளர் விக்னேஷ், தகவல் தொழில் நுட்ப பிரிவு அருண் ஜெபக்குமார், இலக்கிய அணி நடராஜன்,மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முனியசாமி, சரவணன், அரசு வழக்கறிஞர்கள், சுகந்தன் ஆதித்தன், கோமதி மணிகண்டன், அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு பிரபாகர்



 தொழிற்சங்க இணை செயலாளர்கள் கல்வி குமார், ஜவஹர் அமைப்புசாரா நிர்வாகிகள் பாஸ்கர், பொன்னம்பலம், ஒன்றிய செயலாளர்கள் தாமோதரன் ராமச்சநதிரன், செம்பூர் ராஜ் நாராயணன், விஜயகுமார், அழகேசன், காசிராஜன் சௌந்திரபாண்டியன், பேரூர் செயலாளர்கள் மகேந்திரன், செந்தமிழ் சேகர், செந்தில்குமார் ரவிச்சந்திரன்,,பகுதி அ.தி.மு.க.செயலாளர்கள் பொன்ராஜ், நட்டார் முத்து, ஜெயகணேஷ், ராமகிருஷ்ணன், மனோஜ்குமார், இலக்கிய அணி ஜான்சன் மற்றும் விவசாய அணி மணி செரீனா பாக்யராஜ், தகவல் பிரிவுசகாயராஜ், சுந்தர்,ரமேஷ்கண்ணன்,  மணிகண்டன், யூனியன் சேர்மன்வசந்தாஉட்பட பலர் கலந்துகொண்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக