தூத்துக்குடியில் இன்று (18-07-2021) காலை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ( AIYF) சார்பில் தூத்துக்குடி மாநகரின் 46வது வார்டு மற்றும் 47 வது வார்டின் 2021 ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது
இக் கூட்டத்தில் இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் , தோழர் P.சந்தனசேகர் கலந்துகொண்டு அமைப்பின் நோக்கங்கள்,மற்றும் கொள்கைகளை பற்றி பேசினார்.
46 வது வார்டு தலைவராக தோழர் முத்து லட்சுமணன், செயலாளராக தோழர் சக்தி உதவி செயலாளர்களாக அர்ஜுனன், ஈஸ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
47 வது வார்டில் தலைவராக தோழர் ராஜேஷ் ,செயலாளராக தோழர் மாரிமுத்து, துணை செயலாளர்களாக கோபாலகிருஷ்ணன், பாலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள் பலவேசம், ஜீவானந்தம், ராமமூர்த்தி, காளீஸ்வரன்,மாரிமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக