சனி, 17 ஜூலை, 2021

துத்துக்குடியில் சென்னை சீல்க்ஸ் சீல் வைப்பு ? தொடர்ந்து...ரூ 100 கோடி நில அபகரிப்பு சிக்கலில்.... வேலவன் ஹைபர் மார்க்கட் சீல் வைக்கப்படுமா? அதிகாரிகள் அதிரடி ஆய்வு!!!

தூத்துக்குடி சித்தி விநாயகர் கோயில் மற்றும் அருள்மிகு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலுக்கு எழுதி வைக்கப்பட்ட ₹100 கோடி மதிப்புள்ள நிலங்களை அபகரித்து தூத்துக்குடி வேலவன் ஹைப்பர் மார்க்கட் இயங்கி வருவதாக.....? சிக்கலில் மாட்டியுள்ளது.



இதுதொடர்பாக  17-07-2021 அன்று காவல்துறை பாதுகாப்புடன்

 திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ஆ.இராதாகிருஷ்ணன் வருவாய் துறை , இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல் துறை நில அபகரிப்பு தடுப்பு பிரிவினருடன் நிலத்தை ஆய்வு செய்தனர்


இது பற்றிய தகவலாவது:-

தூத்துக்குடியில் வசித்த சிவபக்தர் அரி. சுப்பையா இவர் தூத்துக்குடியில் வியாபாரம் செய்யத் தொடங்கிய காலம்தான் கிடைத்த லாபத்தில் 1/18 இல் ஒரு பங்கு திருவண்ணாமலை யாருக்கும், 1/18 இல் ஒரு பங்கு தூத்துக்குடி சித்தி விநாயகருக்கு என்று சுப்பையா தர்மநிதி என்ற பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து அதற்கு அன்றைய தேதியில் ரூ 28 ஆயிரத்து 540 வைப்பு நிதி மற்றும் பல்வேறு சொத்துக்களை வைத்திருந்தார். 



சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் சித்திவிநாயகர் கோவிலுக்கு பூஜையும்,திருவண்ணாமலையார் கோவிலில் மடமும் கட்ட வேண்டும், அண்ணாமலையார் சாதுக்களுக்கு அன்னம் வழங்கவேண்டும். தூத்துக்குடியில் ஏழை மாணவர்களுக்கு இலவச பாடசாலை ஆரம்பித்து இந்து மத போதனகளை நடத்த வேண்டும் என  சுப்பையா நாடார் எழுதி வைத்திருந்தார்.


ஆனால் அந்த இடத்தை சுப்பையா வகையறாக்கள் கணேசன்,திலகராஜன் அடங்கிய 16பேர் கொண்ட குழுவினர் கடந்த 2000ஆம் ஆண்டில் போலியாக டிரஸ்ட் தீர்மானம் நிறைவேற்றினர். அதன் படி சுப்பையா தர்மநிதி டிரஸ்ட்க்கு சொந்தமான சொத்துக்களில் ஒன்றாக தூத்துக்குடி நகராட்சி 18வது வார்டு எண் ஜின் ஃபேக்டரி ரோட்டில் அமைந்துள்ள 322  சர்வே நம்பருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 70 சென்ட் இடத்தில் தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி கட்டுவதற்கு கொடுக்கப்பட்ட இடம் போக ஒரு ஏக்கர் 17 சென்ட் நிலம் 4219 சதுர மீட்டர் இடம் தூத்துக்குடி வேலவன் ஸ்டோர் பங்குதாரர் விற்கப்பட்டுள்ளது. 



தர்ம நிதிக்கு சொந்தமான இந்த இடம் முறைகேடாக விற்கப்பட்டுள்ளது குறித்து ஆழ்வார்திருநகரியை சார்ந்தவர் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் மற்றும் தலைவர் அ.இராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்றம் சொத்து முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தது. அதோடு சில நடவடிக்கைகளை எடுக்க அரசுதுறைக்கு உத்தரவிட்டது.



 இந்த வழக்கின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் இந்த சொத்துக்களை காவல்துறையின் பாதுகாப்போடு வருவாய்த்துறை, வணிகவரித்துறை, நகர ஊரமைப்பு துறை, உள்ளாட்சி நிர்வாகம், மின்வாரியம், இந்து சமய அறநிலையத்துறை தொடர்புடைய திருக்கோவில் நிர்வாகம் மற்றும் தேவையான இதர அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து, மண்டல நில அளவை துறை துணை இயக்குனர்கள், பறக்கும் காணொளி பதிவுடன் கூடிய நில அளவினை மேற்கொள்ள உத்தரவிட்டது.


இந்த இடங்களை சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்வதோடு குற்றத்திற்கு உடந்தையாக இருந்த பதிவுத் துறை அலுவலர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதோடு குற்றவியல் நடவடிக்கை உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு துறையில் இருந்து அனைத்து பதிவு ஆவணங்களின் நகல்களையும் அலுவலகத்திற்கு இலவசமாகப் பெற்று வருவாய் துறை இந்து சமய அறநிலைத்துறை திருக்கோவில் நிர்வாகம் ஆகியோர் பரிசீலித்து உரிய நடவடிக்கை தொடர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


சொத்துக்களை பாதுகாக்க இந்து சமய அறநிலையத் துறை மூலமாக தக்கார் நியமனம் செய்யப்பட வேண்டும் அவ்வாறு நியமனம் செய்யப்படும் தக்கார் சுயமாக பொறுப்பேற்று தனது நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதோடு அதன் ஒரு பகுதியாக இந்த சொத்துக்களில் நடைபெற்ற குற்றங்கள் குறித்து விரிவான புகாரினை காவல்துறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாரபட்சமின்றி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆவணத்தில் காட்டப்பட்டுள்ள அனைத்து சொத்துகளையும் மீட்டு அதற்குரிய தரும காரியங்கள் அனைத்தையும் முறையாகவும் முழுமையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 



அரசின் தலைமைச் செயலாளர், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு செயலர், வருவாய் துறை அரசு செயலாளர், உள்துறை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அரசு செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வருவாய் நிர்வாக ஆணையர், நில நிர்வாக ஆணையர் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறை காவல் தலைமை இயக்குனர் திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது இதனைத் தொடர்ந்து இன்று இந்த இடம் காவல்துறையின் பாதுகாப்போடு அதிகாரிகள் முன்னிலையில் அளவீடு செய்யப்பட்டன.



இந்த இந்த சர்வே பற்றிய அறிக்கை வரும் 22ஆம் தேதிக்கு முன்னதாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அதனைத் தொடர்ந்து இந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள வேலவன் ஹைப்பர் மார்க்கெட் சீல் வைக்கப்பட்டு இருக்கும் இந்த இடத்திற்கான பத்திரப்பதிவு    ரத்து செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில்...

சமீபத்தில் வேலவன் ஹைபருக்கு மிக அருகில் இயக்கி வந்த சென்னை சில்க்ஸ் இதே போன்ற சிக்கலில் மாட்டி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. 

தற்போது ...அதே போன்று சீல் வைப்பு நில அபகரிப்பு தடுப்பு அதிகாரிகளிடம் சிக்கி இருக்கும் வேலவன் ஹைபருக்கு நேருமா? இல்லை தப்பிவிடுமா? பாரபட்சமின்றி அதிகாரிகளின் நேர்மையான நடவடிக்கையை....? இந்து பக்தர்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக