தூத்துக்குடி மாவட்ட MLF தொழிற்சங்கம் சார்பாக. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பணியாற்றுகின்ற ஒப்பந்த பணியாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் 412 ரூபாய் வழங்கவேண்டுமென வாரியம் போட்ட உத்தரவை அமல்படுத்தி நடவடிக்கை எடுத்திடகோரி மாண்புமிகு அமைச்சர் கீதா ஜீவன் அவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தாஸ் MLFமாநிலத் துணைத்தலைவர் மற்றும் தூத்துக்குடி அனல்மின்நிலைய MLF திட்டச் செயலாளர் பி.தர்மம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அவைத்தலைவர் இ.மகாராஜன் மாநில இலக்கிய அணி துணைச்செயலாளர் பெ.பேச்சிராஜ் மாநில தொண்டரணி துணைச் செயலாளர் மற்றும் தூத்துக்குடி அனல்மின் நிலையMLF திட்ட கௌரவ ஆலோசகர் சரவணன் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக