தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த குறும்பட வெளியிடு நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தார். அமைச்சர் கீதாஜீவன்
அப்போது விடுதலை சிறுத்தைகள் சார்பாக அமைச்சரை சந்தித்து கொரோனா நெருக்கடி காலத்தில் திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு குறித்த காலத்திற்குள் விண்ணப்பிக்க முடியாமல் பலர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என தெரிவித்தோம்.
எனவே எளிய மக்கள் திருமண உதவித்தொகைக்கு விண்ணப்பித்திட கூடுதலாக காலஅவகாசம் வழங்க வேண்டுமென்றும், குறிப்பாக திருமண உதவித்தொகையைப் பெற கிராம நிர்வாக அலுவலரின் சான்று, கூட்டுறவு சங்கம் மூலம் பதிவேற்றல், இணையத்தில் பள்ளிச்சான்று, முகவரிச்சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்தல், திருமணத்தை பதிவு செய்தல் என நடைமுறைச் சிக்கல் கடுமையாக இருப்பதை இலகுவாக்கிட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தோம்.
நம்முடைய கோரிக்கையை கேட்ட அமைச்சர் கடந்த அதிமுக அரசு 2018 டிசம்பர் வரைதான் திருமண உதவித்தொகையை வழங்கியிருக்கிறதென்றும்.... கூடுதல் காலஅவகாசம் வழங்குவது குறித்தும், திருமண உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கும் முறையை இலகுவாக்குவது குறித்தும் துறைசார்ந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவிருப்பதாக பதில் அளித்தார். நன்றி தெரிவித்தோம்.
இந்நிகழ்வின்போது முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இரகுவரன், கட்சியின் சாத்தான்குளம் ஒன்றிய துணைச்செயலாளர் சுரேந்தர், திருச்செந்தூர் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் சுந்தர் ஆகியோரும் உடனிருந்தனர்.
இவண்
சு.விடுதலைச்செழியன்
விசிக - தூத்துக்குடி தெற்கு
Date 20-07-2021


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக