தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏவை ஆலந்தலை ஊர் நல கமிட்டியினர் சென்னையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி லீக்ஸ்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி ஆலந்தலையில் கடல் அரிப்பை தடுக்கும் பொருட்டு ரூபாய் 52 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் நிகழ்ச்சியின் போது தெரிவித்திருந்தார்.
தற்போது தூத்துக்குடி மாவட்டம் வருகை தந்த முதலமைச்சர் அதற்கான பணியை அடிக்கல் நாட்டிய தொடங்கி வைத்தார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த ஆலந்தலை மீனவ கிராம மக்கள் முதலமைச்சருக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று இந்தத் திட்டத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏவை சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் தங்கும் விடுதியில் ஊா்நலக்கமிட்டி தலைவர் மகிபன் தலைமையில் செயலாளர் ரமேஷ், பொருளாளா் ரொமில், ஆலோசகர் ஜான்சன், உறுப்பினர்கள் ஜெய்ட்டன், வென்சஸ்லாஸ்,பேபிராஜ், பிரீமன்,
இனோசென்ட், இருதய ராஜ், பெர்டின் ஆகியோருடன் சென்று நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
அப்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத் தலைவரும் வேளாண் விற்பனை குழு உறுப்பினருமான வழக்கறிஞர் திருப்பாற்கடல், தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, கருங்குளம் ஒன்றிய செயலாளர் ஒன்றிய துணைச் சேர்மனுமாண செக்காரக்குடி லக்ஷ்மணபெருமாள், சாம்ராஜ் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மீனவர் அணி தலைவர் ஜெபமாலை உட்பட பலரும் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக