வியாழன், 4 பிப்ரவரி, 2021

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடி கலெக்டர் - தூத்துக்குடி எஸ்.பி. இன்று கொரானா தடுப்பூசி குத்தி கொண்டனர் !!!

 


தூத்துக்குடி எஸ்பி.ஜெயக்குமார்்
தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ


தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட 
ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப.,  கொரோனா தடுப்பூசி இன்று (04.02.2021) போட்டுக்கொண்டார். அடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன்

இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி

ஆகியோர்களும் கோவி ஷீவ்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.



பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள்

செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-


தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி 16 முதல் சுகாதார பணியாளர்களுக்கு

கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 


முதலில் 5 மையங்கள் மூலம்

தடுப்பூசி போடப்பட்டது தற்போது நமது மாவட்டம் முழுவதும் அரசு

மருத்துவமனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனுமதிக்கப்பட்ட 15

மையங்களில் மாவட்டம் முழுவதும் கொரோன தடுப்பூசிகள் போடப்படுகிறது

தற்போது மேலும் 2 தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா தடுப்பூசி

போடுவதற்கு

அனுமதி வழங்கப்பட்டது.

கொரோனாவில் இருந்து முழுமையாக குனம் அடைவதற்கு கொரோனா

தடுப்பூசி போடுவதே முக்கிய தீர்வாகும். கொரோனா தடுப்பூசி போட்டாலும் கூட

அனைவரும் கட்டாயம் முககவசம் அரிய வேண்டும். சாணிடைசர் பயன்படுத்த

வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், பொது இடங்களில் சமூக

இடைவெளி கடைபிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடப்படுவதற்கு

ஆன்லைனில் புகைப்படம் எடுத்து பதிவு செய்யப்படும் 

🪀: நமது தூத்துக்குடி மாவட்டத்துக்கு

இதுவரை 25000 தடுப்பூசி வரப்பெற்றுள்ளது.

 விரைவில்அனைத்து தரப்பு மக்களுக்கும் கூடுதலாக தடுப்பூசி

போட அனுமதி வரப்பெற்ற உடன் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி

போட வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் அஜாக்கிரதையாக இல்லாமல்

முககவசம், சமூக இடைவெளி தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசி

போட்டுக்கொண்ட அனைவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. அனைவரும்

நலமாக உள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவரும் யாருக்கும் எந்தவித

பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார்


 

இந் நிகழ்ச்சியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரேவதி

மருத்துவ கண்காணிப்பாளர் மரு.பாவலன், மருத்துக்கல்லூரி மருத்துவமனை

துணை முதல்வர் மரு.குமரன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, துணை காவல் கண்காணிப்பாளர் செல்வன்

(மதுவிலக்கு), கொரோனா தடுப்பூசி செலுத்தும் மைய பொறுப்பு அலுவலர்

மரு.மாலையம்மாள் மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக