புதன், 3 பிப்ரவரி, 2021

தூத்துக்குடி மருத்துவ கல்லூரி முதலாண்டு மாணவ-மாணவியர் அறிமுக நிகழ்ச்சி. இலக்கை நிர்ணயித்து முன்னேற வேண்டும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்.வேண்டுகோள்!!!

 தூத்துக்குடி மருத்துவ கல்லூரி முதலாண்டு மாணவ-மாணவியர் அறிமுக நிகழ்ச்சி.

இலக்கை நிர்ணயித்து முன்னேற வேண்டும் 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்.வேண்டுகோள்!!!


தூத்துக்குடி லீக்ஸ்

     தூத்துக்குடி மருத்துவ கல்லூரி முதலாண்டு மாணவ, மாணவியர் அறிமுக நிகழ்ச்சி விழாவில் இலக்கை நிர்ணயித்து முன்னேற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறினார்.

      தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் 150 மாணவ, மாணவியர் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்து உள்ளன.

     இந்த மாணவர்களுக்கு அறிமுக நிகழ்ச்சி மருத்துவ கல்லூரியில் முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் நடந்து.

      தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு வெள்ளை கோட்டு, ஸ்டெத்தஸ்கோப் வழங்கி மாணவ, மாணவிகள் இலக்கை நிர்ணயித்து முன்னேற வேண்டும் கேட்டுக்கொண்டார்.

      நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி துணை முதல்வர் கலைவாணி, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பாவலன், துணை கண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக