திங்கள், 15 பிப்ரவரி, 2021

தூத்துக்குடி வருகை தரும் முதலமைச்சருக்கு சிறப்பு வரவேற்பு.. அதிமுக தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

 பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தூத்துக்குடி வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை

வரவேற்பது மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு குறித்த அதிமுக தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ பங்கேற்பு.



பொதுக்கூட்டம், ரோட்ஷோ போன்ற நிகழ்ச்சிகளை பங்கேற்க நாளை  தூத்துக்குடி வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழகங்களின் சார்பில் சிறப்பாக வரவேற்பது, நிகழ்ச்சி ஏற்பாடு குறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று(15.02.2021) அன்று மாலை தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், இணை செயலாளர் செரினாபாக்கியராஜ்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர், இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட கழக செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை மாவட்ட கழகங்களின் சார்பில் சிறப்பாக வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும் தூத்துக்குடி விமான நிலையம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் , சத்யா ரிசார்ட்டில் நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பு, மாலை மாபெரும் பொதுக்கூட்டம் என அதில் நிர்வாகிகளின் பணி என்ன என்பது குறித்தும் விரிவாக பேசி ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆறுமுகநேரி கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவருமான இரா.சுதாகர், மாநில அமைப்பு சாரா ஒட்டுனரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் வக்கீல் முள்ளக்காடு செல்வகுமார், மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் ராஜசேகர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வக்கீல் வீரபாகு, முன்னாள் மீன் வளர்ச்சிக் கழக வாரியத் தலைவர் அமிர்த கணேசன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பிரிவுச் செயலாளர் 

டேக் ராஜா,மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே. பிரபாகர், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலளார் அருன்ஜெபக்குமார் மாவட்ட மீனவரணி செயலாளர் டார்சன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் அக்ரி பெருமாள், மாநகரப் பகுதி கழக செயலாளர்கள் வடக்குப்பகுதி பொன்ராஜ், மத்திய வடக்குப்பகுதி ஜெய்கணேஷ், மத்திய தெற்கு பகுதி நட்டார்முத்து, தெற்குப் பகுதி பி.என்.ராமகிருஷ்ணன், ஒன்றிய கழக செயலாளர்கள் திருச்செந்தூர் இராமச்சந்திரன், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு அழகேசன், ஸ்ரீவைகுண்டம் மேற்கு காசிராஜன், ஆழ்வார்திருநகரி கிழக்கு விஜயகுமார், மேற்கு ராஜ்நாராயணன், காயல்பட்டினம் நகர செயலாளர் டாக்டர் காயல் மவுலானா, மற்றும் பேரூராட்சி கழக செயலாளர்கள் செந்தில் ராஜ் குமார், வேதமாணிக்கம் துரைச்சாமி ராஜா, ஸ்ரீவைகுண்டம் காசிராஜன், ஆறுமுக நயினார், சோமசுந்தரம், ரவிச்சந்திரன், காணம் செந்தமிழ் சேகர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் முனியசாமி, துணைச் செயலாளர்கள் ரவீந்திரன், சரவண பெருமாள், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சத்யா லட்சுமணன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் குணசேகரன், துணை செயலாளர் வலசை வெயிலுமுத்து, தூத்துக்குடி மாநகர வட்ட கழக செயலாளர்கள் மற்றும் பூந்தோட்டம் மனோகரன், குலசை சங்கரலிங்கம்,  மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் சுந்தரேஸ்வரன், பொருளாளர் பரிபூர்ண ராஜா, அன்பு பாலன், பாலஜெயம், சாம்ராஜ் உட்பட பெருந்திரளான கழகத்தினர் கலந்துகொண்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக