சனி, 2 ஜனவரி, 2021

தூத்துக்குடியில் ..சாதி பெயரை சொல்லி கம்பால் தாக்கி, மன்னிப்பு கேட்க வைத்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.!!!

 தூத்துக்குடி லீக்ஸ்02.01.2021

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாதி பெயரை சொல்லி கம்பால் தாக்கி, மன்னிப்பு கேட்க வைத்து  கொலை மிரட்டல் விடுத்தவர் கைது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  அதிரடி நடவடிக்கை. எடுத்துள்ளார்.

 


தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரவேல்புரம், அம்பேத்கார் நகரைச் சேர்ந்த சேகர் என்பவரது மகனும், தூத்துக்குடி ஹவுசிங் போர்டு, கே.டி.சி நகரைச் சேரந்த மாரியப்பன் என்பவரது மகனும் பள்ளி நண்பர்கள். இவர்கள் இருவரும் இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.என ெதரிய வருகிறது.

கடந்த 7 மாதத்திற்கு முன்பு தூத்துக்குடியில் ஒரு திருமண விழாவின் போது சேகர் மகன் தரப்பினருக்கும், மாரியப்பன் மகன்  தரப்பினருக்கும் நடனம் ஆடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாரியப்பன் மகன்களில் ஒருவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வாகன விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்த நிலையில் சேகர் மகன் மருத்துவமனைக்கு பார்க்க சென்ற போது மாரியப்பன் மகன் மற்றொருவருக்கும், சேகர் மகனுக்குமிடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாரியப்பன் மகன் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

 இந்நிலையில் கடந்த 31.12.2020 அன்று மதியம் சேகர் மகன் சண்முகபுரம் தெற்கு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது  எதிரியான மாரியப்பன் மகன், சேகர் மகனை வழிமறித்து சாதி பெயரை சொல்லி தாக்கியதுடன் மன்னிப்பு கேட்க வைத்து விரட்டியடித்துள்ளார்.

இதனையடுத்து சேகர் மகன் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஜெயக்குமார்  உடனடியாக தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் தலைமையிலான போலீசார் இச்சம்பவத்தில் தொடர்புடையவரை விரைந்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார். 

அதன்படி இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியான மாரியப்பன் மகனை கைது செய்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக