ஞாயிறு, 3 ஜனவரி, 2021

தமிழக முதல்வர் அறிவித்த... ரூ 2500 பரிசு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ.துவக்கி வைத்தார்.பொது மகிழ்ச்சி!!!

 தூத்துக்குடி லீக்ஸ் 

2021-ல் வருகின்ற  தை பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் மகிழ்வுடன் கொண்டாட  தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி பழனிச்சாமி  பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ரூபாய் 2500 ரொக்கப் பணம் வழங்கப்படும் என அறிவித்து இருந்தார் 






அதன் படி தூத்துக்குடி மாவட்டத்தில்

இன்று 04-01-2021 காலை 08.00 மணிக்கு பண்டாரவிளை கிராமத்தில் முன்னாள் அமைச்சரும். தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. பொங்கல் பரிசு தொகுப்பு அப்பகுதி பொதுமக்களுக்கு வழங்கி முதலில் துவக்கி வைத்தார்.

பின்பு 09.00மணிக்கு தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு அங்காடியில் உள்ள நியாய விலை கடையில் துவக்கி வைத்தார் எஸ்.பி.சணமுகநாதன எம்.எல்ஏ. 

இதை அடுத்து ஸ்ரீவைகுண்டம் நகர கூட்டுறவு வங்கி அருகில் உள்ள நியாயவிலைக் கடையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி சண்முகநாதன் எம்எல்ஏ துவங்கி வைத்தார்.

சிறப்பு தொகுப்பு மற்றும் ரூபாய் 2500 ரொக்கம் ஆகியவற்றை வழங்கி துவக்கி வைக்கும் நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள நியாய விலை கடையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர் தலைமையில் நடைபெற்றது.

துணைப்பதிவாளர் சுப்புராஜ், கூட்டுறவு சார்பதிவாளர் சேஷகிரி, சூர்யா, நிர்வாக மேலாளர் அந்தோணி பட்டு ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் வதனா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் அரிசி குடும்ப அட்டை பயனாளிகளுக்கு அங்கு அமைந்துள்ள மூன்று நியாய விலை கடை களிலும் முதலமைச்சர் எடப்பாடியார் அறிவித்த பொங்கல் சிறப்பு தொகுப்பு ரூபாய் 2500 ரொக்க பணம், பச்சரிசி, முழுக் கரும்பு, வெல்லம், வேஷ்டி சேலை, ஏலம், முந்திரி கிஸ்மிஸ் ஆகியவற்றை வழங்கி பேசினார். 

அப்போது முதலமைச்சரின் இந்த மகத்தான திட்டத்திற்கு பொதுமக்களாகிய நீங்கள் எப்போதும் ஆதரவு தரவேண்டும் என பேசி பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் பணியை துவங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வக்கீல் முள்ளக்காடு செல்வகுமார், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் ராஜசேகர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் வீரபாகு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, மாவட்ட கழக இணைச் செயலாளர் செரினா பாக்யராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே. பிரபாகர், மாநகரப் பகுதி கழக செயலாளர்கள் பிஎன் ராமகிருஷ்ணன், பொன்ராஜ், நட்டார் முத்து, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் சரவண பெருமாள், மாவட்ட தொழிற் சங்க இணைச் செயலாளர் கேடிசி.லட்சுமணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன், மேலூர் கூட்டுறவு வங்கி நிர்வாக குழு உறுப்பினர் வேல்முருகன், இசக்கிமுத்து, வட்டக் கழக செயலாளர்கள் எஸ் கே முருகன், கொம்பையா, முத்துவீரன், உலகநாத பெருமாள், சந்திரசேகர், வட்டக் கழக பிரதிநிதி சிம்மம் ராஜ்குமார்,1ஆம் சுடலை மாரியப்பன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சகாயராஜா, வடக்கு பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜன் கண்ணா, மாவட்ட பிரதிநிதி சொக்கலிங்கம், வட்ட பிரதிநிதி பூக்கடை வேலு  உட்பட பலர் இருந்தனர்.


இந்த நிகழ்ச்சியில்  தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக